உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

நெல்லிக்காய் ஊறுகாய்

 


தேவையானப் பொருட்கள்

  • நெல்லிக்காய்-20
  • மிளகாய் வற்றல்-8
  • மஞ்சள்தூள்-1/4தேக்கரண்டி
  • உப்பு-தே.அ
  • நல்லெண்ணெய்-2மேசைக்கரண்டி
  • பெருங்காயம்-1தேக்கரண்டி
  • கறிவேப்பிலை-2இனுக்கு
  • பூண்டு-3பல்
  • கடுகு-1/2தேக்கரண்டி

செய்முறை

  • நெல்லிக்காயை குக்கரில் ஆவியில் வேக வைக்கவும்.
  • மிளகாயை வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்.
  • பூண்டை நசுக்கி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு கறிவேப்பிலை தாளித்து பூண்டை சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.
  • மிளகாய் தூள்,மஞ்சள்தூள்,பெருங்காயம் உப்பு சேர்த்து நெல்லிக்காயை சேர்த்து 5நிமிடம் கிளறி இறக்கவும்.

குறிப்பு:

ஃப்ரிட்ஜில் வைத்தால் 2வாரம் வரை கெடாமல் இருக்கும். தயிர் சாதத்துடன் சுவையே தனி.

வழங்கியவர்

கவிசிவா

random food image


comments
100 -க்கு வாழ்த்துக்கள்
ஜனவரி 18, 2008 - 7:22am - வழங்கியவர் saraswathi

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

சதம் அடித்ததற்கு முதலில் வாழ்த்துக்கள் பல கோடி. நெல்லிக்காய் ஊறுகாய் நீங்கள் கொடுத்திருக்கும் குறிப்பு பெரிய நெல்லியா [அல்லது] சின்ன நெல்லியா. இரண்டுமே எங்கள் தோட்டத்தில் உள்ளது. தெரிந்தால் ஊறுகாய் போடத்தான்.

பெரிய நெல்லிக்காய்தான்
ஜனவரி 18, 2008 - 8:14am - வழங்கியவர் kavisiva

திருமதி சரஸ்வதி,வாழ்த்துக்கு நன்றி.பெரிய நெல்லிக்காயில்தான(கசப்பாக இருக்குமே அது) இந்த ஊறுகாய் செய்ய வெண்டும்.சின்ன நெல்லிக்காயை(புளிப்பாக இருக்குமே அது) மாங்காய் உப்பிலிட்டது(எனது குறிப்பில் உள்ளது)போல செய்யலாம்.நெல்லிக்காயை அப்படியே சுத்தம் செய்து போட வேண்டியதுதான்.

வாழ்த்திய கவிக்கு வாழ்த்துக்கள்
பிப்ரவரி 26, 2008 - 2:45am - வழங்கியவர் mptindira

ஹாய் கவிசிவா,
தங்களுடைய சதத்திற்கு வாழ்த்துக்கள்.
தங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி. நாஞ்சில் நாட்டில் தங்களுக்கு எந்த ஊர்.

இப்படிக்கு
இந்திரா