www.arusuvai.com
முருங்கைக்கீரை இனிப்பு அடை
இதையே தோசை மாவு பதத்தில் கரைத்து தோசையாகவும் வார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
- கேழ்வரகு மாவு - 1 கப்
- ஆய்ந்த முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
- ஏலக்காய்ப்பொடி - 2 சிட்டிகை
- வெல்லம் - 1/2 கப்
- தேங்காய் - 1/4 கப்
- நெய் - தேவையான அளவு
செய்முறை
- கேழ்வரகு மாவில், முருங்கைக்கீரை, ஏலக்காய்பொடி சேர்க்கவும்.
- வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரைந்ததும், சூடாக வடிகட்டி மாவில் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
- தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
- தோசைக் கல்லை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும், வாழை இலையில் சிறிது நெய் தடவி பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக எடுத்துத் தட்டிப் போட்டு நெய் விட்டு இரு புறமும் சுட்டு எடுக்கவும்.
-
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
2 நபர்கள் |
5 நிமிடங்கள் |
5 நிமிடங்கள் |