சுக்கு,ginger powder இவை இரண்டும் ஒன்றா ?

ginger powder,சுக்கு -இவை எல்லாம் ஒன்றா ? ginger powder கடைகளில் கிடைகிறது. சுக்கு பதிலாக இதை பயன்படுத்தலாமா ?

பயன் படுத்தலாம்
சுக்கு முழுசு கிடைக்கும் அதை ஒரு பேப்பரில் வைத்து தட்டினால் தூளாகிவிடும் அதுடன் சோம்பு,வெல்லம் கந்து வைத்து கொண்டு, வய்ற்று வலி,வயிற் கேச் பிராப்ளம் இதுக்கு அப்ப்டியே மிக்ஸ் பண்ணி சாப்பிட்டு வெண்ணீரும் குடிக்கலாம்,
இல்லை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நல்ல் கொதிக்கவைத்து சுண்டியதும் அதில் சூடான் பால் மற்றும் காபி பொடி கொஞ்சமா போட்டு குடித்தால் கேட்கும்.
ஜலீலா

Jaleelakamal

இஞ்சியைக் காய வைத்தால் கிடைப்பதுதான் சுக்கு. சுக்குக்கு பதிலாக இஞ்சியை உபயோகிக்கலாம். ஆனால் இஞ்சிக்கு பதிலாக (குருமா போன்றவற்றிற்கு - இஞ்சி, பூண்டு பேஸ்ட்) சுக்கை உபயோகிக்க முடியாது,
அன்புடன்
ஜெயந்தி மாமி

ரொம்ப நன்றி .

டியர் ps2002 எப்டி இருக்கீங்க? மிக நல்ல கேள்வியை கேட்டுள்ளீர்கள். சுக்கும்-ஜிஞ்சர் பவுடருக்கும் மூலப் பொருள் ஒன்று தான்,பதப்படுத்தும் விதத்தில் தான் மாற்றம் இருக்கும் என்றுநினைக்கின்றேன்.சகோதரிகள் கூறியுருப்பதுப் போல் கடைகளில் கிடைக்கும் ஜிஞ்சர் பவுடரை சுக்குக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

மேலும் சமையலில் கூட இஞ்சிக்கு பதிலாக இந்த பவுடரைச் சேர்த்துக் கொள்ளலாம்,இஞ்சியை சேர்க்கப்படும் அளவிலிருந்து பாதியாக குறைத்துக் கொள்ளவேண்டும் அவ்வளவு தான்.முக்கியமாக சிக்கன், மட்டன் போன்ற அசைவக் குழம்பு வகைகளில், மேலும் சைவ வகைகளில் கூட தாராளமாக பயன்படுத்தலாம்.டிரைச் செய்துப் பாருங்கள்.

ரொம்ப நன்றி மேடம். நான் ginger powder வாங்கி செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

மேலும் சில பதிவுகள்