சௌ சௌ பஜ்ஜி

தேதி: January 18, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
சௌ சௌ- 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

சௌ சௌவை தோல், விதை எடுத்து வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள்,மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள சௌ சௌ துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு இரு புறமும் திருப்பி வேக விட்டு எடுக்கவும்.
சுவையான சௌ சௌ பஜ்ஜி தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சௌ சௌ பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு வந்து சூடாக கமண்ட் போடுகிறேன் அக்கா.
சூப்பராக இருந்தது. குறிப்புக்கு நன்றி.

‍- இமா க்றிஸ்

முன்பு ஒரு முறை உங்கள் குறிப்பைப் பார்த்து சௌ சௌ பஜ்ஜி செய்தேன். எப்படி வந்தது என்பதை நீங்களே பார்த்துக் கொள்ள இந்தச் சுட்டி - http://www.arusuvai.com/tamil/node/26387 :-)

மிக்க நன்றி அக்கா.

மாமி, எனக்கு சௌ சௌ கிடைக்கல, சுக்கினி வைத்து செய்தேன், ரொம்ப நல்லா இருந்துச்சு. நன்றி மாமி. உங்க குறிப்புகள் எல்லாமே நல்லா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா நான் இன்று சௌ சௌ பஜ்ஜி செய்தேன். நன்றாக இருந்தது, நன்றி அக்கா.