வெங்காய கொத்தமல்லி தோசை

தேதி: January 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

தோசை மாவு - இரண்டு கப்
வெங்காயம் - மூன்று
கொத்தமல்லி தழை - அரை கட்டு
பச்சை மிளகாய் - இரண்டு
மாவு கலக்க:
உப்பு - தேவையான அளவு
இட்லி சோடா - ஒரு பின்ச்
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி


 

தோசை மாவில் கலக்க வேண்டியவைகளை போட்டு தோசை ஊற்றும் பதத்திற்கு கலக்கி கொள்ளவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி போடவும். கொத்தமல்லி தழையை ஆய்ந்து பொடியாக நறுக்கி விட்டு மண் இல்லாமல் ஒரு புளி வடிக்கட்டியில் வைத்து நன்கு அலசி மாவில் கலக்கவும். பத்து நிமிடம் கழித்து சுட்டு சாப்பிடவும்.
சுவையான வெங்காய கொத்தமல்லி தோசை ரெடி


சட்னி, சாம்பார், குருமா ம் ம் உங்க இஷ்டம் தான் பூந்து விளையாடுங்க

மேலும் சில குறிப்புகள்