உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

வெண்டக்காய் மசாலா

 


தேவையானப் பொருட்கள்

  • வெண்டக்காய் - 15
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் - 1.2 ஸ்பூன்
  • மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
  • உப்பு - 3/4 ஸ்பூன்
  • வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
  • தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
  • கறிவேப்பிலை - 10 இலைகள்
  • கரம் மசால பொடி - 1/4 ஸ்பூன்
  • தேங்காய்ப் பால் - 1/4 கப்
  • எண்ணை- 2 ஸ்பூன்

செய்முறை

  • உப்பு,மிளகாய்,மஞ்சள்,மல்லித் தூள்களை ஒன்றாய் கலந்து வைக்கவும்..வெண்டக்காயை கீழிருந்து மேலாக கீரி காம்பு பகுதியில் கீராமல் வைக்கவும்..நடுவே கலந்து வைத்த பொடியை தேய்த்து அது போல் 15 வெண்டக்காய்களையும் வைக்கவும்
  • 1 ஸ்பூன் தேங்காய் என்னையை காயவைத்து அதில் வெண்டக்காயை இட்டு 5 நிமிடம் லேசாக வறுத்து வாரி வேறு பாத்திரத்தில் வைக்கவும்..
  • பின் மீதமுள்ள என்னையில் வெங்காயம்,தக்காளி வதக்கி தக்காளி உடைந்ததும் மீதம் வெண்டக்காயில் தேய்த்தபொடி இருந்தால் அதனையும் இட்டு வதக்கி கரம் மசாலா பொடி சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி கறிவேப்பிலை,வெண்டக்காய்,தேங்காய்ப் பால் சேர்த்து கிளறி 5 நிமிடம் மூடியிடாமல் கொதிக்க விட்டால் பால் கொஞ்சம் வற்றி நல்ல மசாலா வெண்டக்காயில் பிடிக்கும்..உப்பு தேவையெனில் சேர்க்கலாம்.

குறிப்பு:

இதுவும் தயிர் சாதமும் நல்ல காம்பினேஷன்...வெஜிடேரியன் வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது இது தான்

வழங்கியவர்

தளிகா

random food image


comments
Vendai kai masala
ஜனவரி 20, 2008 - 1:03pm - வழங்கியவர் இலா

Hi Talika
Can I skip coconut milk for this recipe. How will it turn out??

ila
Hope is just the part of the equation

ஹை இளவீரா
ஜனவரி 20, 2008 - 4:20pm - வழங்கியவர் thalika

ஹை இளவீரா
தெரீலம்மா...நான் இதுவரை பால் ஊற்றி தான் செய்கிறேன்..முன்னொரு முறை டிவியில் பார்த்தி செய்தது தான்..இது நல்ல திக்காக மசாலா போல் வர வேண்டும்..நான் இனியொரு நாள் பால் சேர்க்காது செய்து உங்களிடம் சொல்கிறேன்..ஆனால் பெரிய வித்யாசம் எதுவும் இருக்காது என்றே நினைக்கிறேன்

தாளிகா மேடம்
ஜனவரி 31, 2008 - 4:25am - வழங்கியவர் supriyaprabakaran

take life as it comes

ஹாய் தாளிகா மேடம் எப்படி இருக்கீங்க? நேற்று சொல்ல முடியலை, உங்க இந்த ரெசிபிய செய்தேன்.ரொம்ப சூப்பர் மேடம். நல்லா வந்துது நல்லாவும் இருந்துது. என் கணவரின் அண்ணன் பையன் வெண்டைக்காயெ சாப்பிட மாட்டானாம் ஆனால் இதை விரும்பி சாப்பிட்டான் அவங்க இந்த குறிப்பை என்னிடம் இருந்து எடுத்து சென்றார்கள். ஆனால் மேடம் பெயரை மாத்திட்டேன் வெண்டைக்காய் பால் கறின்னு. சாரி மேடம். நன்றி மேடம் ரொம்ப. ம் அப்பறம் அந்த வறுத்த உருளை குருமாவும் செய்தேனே அங்க வரேன். pls நீங்களும் வாங்களேன்.

ஹாய் சுப்ரியா
ஜனவரி 31, 2008 - 4:33am - வழங்கியவர் thalika

ஹாய் சுப்ரியா தோ வந்தாச்சு.எனக்கு ரொம்ம்ப சந்தோஷம் சுப்ரியா.பேரை எப்டி வேனா மாத்தலாம்...நாம செஞ்சு நல்ல வந்தது மற்றவர்களுக்கும் நல்ல வந்ததுன்னு கேட்டா எவ்வளவு சந்தோஷம் தெரியுமா.ரொம்ம்ப நன்றிம்மா தவறாமல் பின்னூட்டமும் கொடுத்ததற்கு..ஆனால் மேடம்னு கூப்பிட வேண்டாம் சரியா.அக்கான்னு கூப்பிடுங்க

தளிகா:-)