கடலைப்பருப்பு சட்னி

தேதி: January 20, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைப்பருப்பு - 1 கைப்பிடி,
சின்ன வெங்காயம் - 5,
தக்காளி -2,
காய்ந்த மிளகாய் - 4,
பெருங்காயம் - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 5,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி.


 

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய், கடலைப் பருப்பு, பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.
அத்துடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி எடுத்து உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.


இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஒரு மாறுதலான சட்னி.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹலோ செல்வி எப்படி இருக்க? கெ டுகெதர் மூடிலேயே இருக்கியா?உடம்பு முடியாவிட்டாலும் சென்று விழாவை சிறப்பித்திருப்பது பாராட்டத்தக்கது. உன்னுடய பார்வையில் வந்த பதிவைப் படித்தேன், அட்மின் வெளியிட்டிருந்த புகைப்படங்களையும் பார்த்தேன் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த கடலைப் பருப்பு சட்னியை செய்தேன்ப்பா கார அடைக்கு ரொம்ப பொருத்தமாக இருந்தது நன்றி.

கடலைப் பருப்பு சட்னி,
செல்வியக்கா, வித்தியாசமான சுவையாகவும் செய்யச் சுலபமாகவும் இருந்தது. ஈசியான குறிப்புக்கு மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா,
என் தோழி சொல்லிக் கொடுத்த குறிப்பு இது. இங்கு வந்த பிறகு அவங்களை ரொம்பவே மிஸ் பண்றேன்.நன்றிப்பா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு தோழி மனோகரி,
நலமா? டைகர் எப்படி இருக்கான்? எங்க லக்கி ரொம்ப பெரிசாகிட்டான்.
கெட் டு கெதர் உண்மையிலேயே மறக்க முடியாத நாள். படித்து, படம் பார்த்தாவது தான் நீங்களெல்லாம் சந்தோஷப்பட முடியும். கஷ்டமா இருக்கு.
அடைக்கு நான் இதுவரை அவியல், தேங்காய் சட்னி தான் செய்வேன். இப்ப இந்த சட்னியும் நல்லாயிருக்கும்னு தெரிஞ்சிகிட்டேன். நன்றிப்பா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.