தேவையானப் பொருட்கள்
- கடலைப்பருப்பு - 1 கைப்பிடி,
- சின்ன வெங்காயம் - 5,
- தக்காளி -2,
- காய்ந்த மிளகாய் - 4,
- பெருங்காயம் - சிறிது,
- கடுகு - 1/2 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - 5,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 1 தேக்கரண்டி,
- நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி.
செய்முறை
- வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய், கடலைப் பருப்பு, பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.
- அத்துடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி எடுத்து உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
- வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
-
குறிப்பு
இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஒரு மாறுதலான சட்னி.
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு. |
10 நிமிடங்கள். |