உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

உளுத்தம் பருப்பு சட்னி

 


தேவையானப் பொருட்கள்

  • உளுத்தம் பருப்பு - 4 மேசைக்கரண்டி,
  • சின்ன வெங்காயம் - 5,
  • தக்காளி -2,
  • பச்சை மிளகாய் - 4,
  • இஞ்சி - 1/2 அங்குல துண்டு,
  • கடுகு - 1/2 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை - 5,
  • உப்பு - தேவையான அளவு,
  • எண்ணெய் - 1 தேக்கரண்டி,
  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி.

செய்முறை

  • வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய், உளுத்தம் பருப்பு, இஞ்சி சேர்த்து வறுக்கவும்.
  • அத்துடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி எடுத்து உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

குறிப்பு:

இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஒரு மாறுதலான சட்னி.

வழங்கியவர்

இ. செந்தமிழ்செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

2 நபர்களுக்கு. 10 நிமிடங்கள்.
random food image


comments