உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

அன்னாசி ரசம்

 


தேவையானப் பொருட்கள்

  • அன்னாசிபழ துண்டு - 3 (1/4 பழம்),
  • பச்சை மிளகாய் - 3,
  • கறிவேப்பிலை - சிறிது,
  • சீரகம் - 1 தேக்கரண்டி,
  • மிளகு - 1/2 தேக்கரண்டி,
  • தக்காளி - 1,
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
  • கொத்துமல்லி - சிறிது,
  • கடுகு - 1/2 டீஸ்பூன்,
  • உப்பு - தேவையான அளவு,
  • எண்ணெய் - 1 ஸ்பூன்.

செய்முறை

  • அன்னாசிப் பழத்தை பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, ஜூஸை வடிக்கட்டி வைக்கவும்.
  • தக்காளியை பொடியாக நறுக்கி, மசித்து வைக்கவும்.
  • சீரகம், மிளகை பொடித்து வைக்கவும்.
  • பச்சை மிளகாயை இரண்டாக கீறவும்.
  • எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கீறிய பச்சை மிளகாய்,மசித்த தக்காளி, வடிக்கட்டிய ஜூஸ், பொடித்த சீரக, மிளகு, 2 தம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொடிக்க விடவும்.
  • கொதித்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு. 10 நிமிடங்கள்.
  random food image


comments