உப்புக்கண்ட குழம்பு

image

வழங்கியவர் : senthamizh selvi

தேதி : ஞாயிறு, 20/01/2008 - 22:06

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்.

பரிமாறும் அளவு : 2 நபர்களுக்கு.

0
No votes yet
Your rating: None
 

 

  • உப்புக்கண்டம் - 10,
  • சின்ன வெங்காயம் - 10,
  • பூண்டு - 6 பல்,
  • தக்காளி - 2,
  • மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி,
  • தனியாத்தூள் - 2 தேக்கரண்டி,
  • புளி - 1 நெல்லிக்காயளவு,
  • சோம்பு - 1/2 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை - 10,
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு.

 

  • உப்புக்கண்டத்தை தட்டி 1/2 டம்ளர் வெந்நீரில் ஊறவைக்கவும். வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கவும்.
  • குக்கரில் எண்ணெய் விட்டு, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  • பிறகு வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், உப்புக்கண்டம் சேர்த்து வதக்கவும்.
  • புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி, எல்லாத்தூள்களையும், உப்பையும் போட்டு குக்கரை மூடி 15 நிமிடம் கழித்து இறக்கவும்.

Note:

உப்பு ஏற்கனவே உப்பக்கண்டத்தில் இருப்பதால், குறைவாக போட வேண்டும்.