தேவையானப் பொருட்கள்
- உப்புக்கண்டம் - 10,
- சின்ன வெங்காயம் - 10,
- பூண்டு - 6 பல்,
- தக்காளி - 2,
- மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி,
- தனியாத்தூள் - 2 தேக்கரண்டி,
- புளி - 1 நெல்லிக்காயளவு,
- சோம்பு - 1/2 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - 10,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- எண்ணெய் - 2 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை
- உப்புக்கண்டத்தை தட்டி 1/2 டம்ளர் வெந்நீரில் ஊறவைக்கவும்.
- வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கவும்.
- குக்கரில் எண்ணெய் விட்டு, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- பிறகு வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
- வதங்கிய பின், உப்புக்கண்டம் சேர்த்து வதக்கவும்.
- புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி, எல்லாத்தூள்களையும், உப்பையும் போட்டு குக்கரை மூடி 15 நிமிடம் கழித்து இறக்கவும்.
-
குறிப்பு
உப்பு ஏற்கனவே உப்பக்கண்டத்தில் இருப்பதால், குறைவாக போட வேண்டும்.
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு. |
20 நிமிடங்கள். |