உப்புக்கண்டம்

image

வழங்கியவர் : senthamizh selvi

தேதி : ஞாயிறு, 20/01/2008 - 22:08

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் : 10 நிமிடங்கள்.

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • ஆட்டு இறைச்சி (மட்டன்) - 1/2 கிலோ,
  • இஞ்சி - 1/2 அங்குல துண்டு,
  • பூண்டு - 10 பல்,
  • காய்ந்த மிளகாய் - 10,
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
  • உப்பு - தேவையான அளவு.

 

  • பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மைய அரைத்து வைக்கவும்.
  • ஆட்டு இறைச்சியை கழுவி சுமாரான துண்டுகளாக நறுக்கவும்.
  • அரைத்த விழுது சேர்த்து மட்டனில் நன்கு பிசிறவும்.
  • பிசிறிய மட்டனை ஒரு நூலில் கோர்த்து வெய்யிலில் நன்கு காய வைக்கவும். (வரும் காகத்திற்கு நான் பொறுப்பல்ல).
  • நன்கு காய்ந்ததும் எடுத்து டப்பாவில் போட்டு மூடி வைத்தால் கெடவே கெடாது.
  • தேவைப்படும் போது எண்ணெயை காய வைத்து உப்புகண்டத்தை லேசாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டியதுதான்.

Note:

இளம் ஆட்டுக்கறியாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும். இதில் குழம்பும் வைக்கலாம்.







செல்வீக்க்கா இது முன்னொருமுறை சாப்பிட்டிருக்கிறேன்..போன்லெஸ் மட்டன் தானே?

தளிகா

இது இஸ்லாமிய இல்லங்களில் போடுவதச்சே, இப்ப கூட ஊரிலிருந்து வந்துள்ளது . பெரிய சுத்தமான கோனி ஊசியில் சனல் கயிறில் கோர்க்கனும் வெயில் டெயிலி உலர்த்தனும்.
நல்ல சுக்கா காய்ந்ததும் டப்பாவில் போட்டு வைக்கனும்.பொரிக்கும் போது பேப்பரில் வைத்து நல்ல தட்டி விட்டு தான் பொரிக்கனும்.நேற்று கூட புளி சோறுக்கு அதான் பொரித்து சாப்பிட்டேன்.
ஜலீலா

Jaleela

ஹாய் ரூபி,
ஆமாம், போன்லெஸ் மட்டன்தான் நன்றாக இருக்கும். எங்கள் ஊரில் விருந்துக்கு ஒரு ஆடே வெட்டுவார்கள். அப்ப நெஞ்சுக்கறியா எடுத்து கோர்த்து காய வைத்து விட்டு மீதிதான் சமையலுக்கு:-))
கடையில் கூட உப்புக்கண்டம் போடன்னு கேட்டா நல்ல நெஞ்சுக்கறியா தருவாங்க. செய்து பார். பிறகு விடவே மாட்டே. எங்க ஊர்ல உப்புக்கண்டமும், ஆட்டுக்காலும் இல்லாத வீடே இருக்காது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி அக்கா உத்வி செய்யுங்க , நான் உப்புகண்டம் போட்டேன் ஆன பொரிச்சு சாப்பிட்டால் டேஸ்டெ பிடிக்கலக்கா அரை கிலொ கரியை செய்தேன் , என்ன செய்யலாம்? ஏதாவது ஐடியா சொல்லுஙக அக்கா ப்ளீஸ் .....