எங்க ஊர்ப்பக்கம் இந்த உப்புக்கண்டம் இல்லாத வீடே இருக்காது எனலாம். தேவைப்பட்ட போது எண்ணெயில் பொரித்து சாப்பாட்டிற்கு தொட்டுக்க வைப்பார்கள். உப்புக்கண்டம் இருந்தால் இன்னும் இரண்டு வாய் சாதம் உள்ளே போகும்னு எங்க ஊரில் சொல்வாங்க.
தேவையானப் பொருட்கள்
- ஆட்டு இறைச்சி (மட்டன்) - 1/2 கிலோ,
- இஞ்சி - 1/2 அங்குல துண்டு,
- பூண்டு - 10 பல்,
- காய்ந்த மிளகாய் - 10,
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை
- பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மைய அரைத்து வைக்கவும்.
- ஆட்டு இறைச்சியை கழுவி சுமாரான துண்டுகளாக நறுக்கவும்.
- அரைத்த விழுது சேர்த்து மட்டனில் நன்கு பிசிறவும்.
- பிசிறிய மட்டனை ஒரு நூலில் கோர்த்து வெய்யிலில் நன்கு காய வைக்கவும். (வரும் காகத்திற்கு நான் பொறுப்பல்ல).
- நன்கு காய்ந்ததும் எடுத்து டப்பாவில் போட்டு மூடி வைத்தால் கெடவே கெடாது.
- தேவைப்படும் போது எண்ணெயை காய வைத்து உப்புகண்டத்தை லேசாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டியதுதான்.
-
குறிப்பு
இளம் ஆட்டுக்கறியாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும். இதில் குழம்பும் வைக்கலாம்.
சமைக்கும் நேரம்
|
|
10 நிமிடங்கள். |