கோழிச்சாறு

வழங்கியவர் : senthamizh selvi
தேதி : ஞாயிறு, 20/01/2008 - 22:09
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்.
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு.
- கோழிக் குஞ்சு - 1/2 கிலோ,
- சின்ன வெங்காயம் - 10,
- பூண்டு - 8 பல்,
- தக்காளி - 1,
- மிளகு - 1 மேசைக்கரண்டி,
- சீரகம் - 2 தேக்கரண்டி,
- தனியா - 2 தேக்கரண்டி,
- வெந்தயம் - 1/2 ஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் - 2,
- கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - 10,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- எண்ணெய் - 1 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு.
- கோழியை சுத்தம் செய்து, நசுக்கி, சிறிய துண்டுகளாக பிய்த்து போடவும். (சின்ன கோழி கிடைக்கவில்லையென்றால், கோழிக்கறியையே சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)
- வெறும் வாணலியில் மிளகாய், மிளகு, சீரகம், தனியா, வெந்தயம், கடலைப்பருப்பு போட்டு சிவக்க வறுத்து, நைசாக பொடிக்கவும்.
- அத்துடன் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
- தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
- குக்கரில் எண்ணெய் விட்டு, கோழியை அதில் போட்டு வதக்கவும்.
- வதங்கிய பின், தக்காளி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 15 நிமிடம் கழித்து இறக்கவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
49 நிமிடங்கள் 31 sec முன்பு
53 நிமிடங்கள் 44 sec முன்பு
59 நிமிடங்கள் 9 sec முன்பு
59 நிமிடங்கள் 54 sec முன்பு
ஒரு மணி நேரம் 5 sec முன்பு
ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 47 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு