ஷெப்சி பட்டர் சிக்கன்

தேதி: January 20, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கோழிக்கறி - 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் - 1,
எலுமிச்சம் பழம் - 1மூடி,
தயிர் - 1/2 கப்,
இஞ்சி- 1/2 அங்குல துண்டு,
பூண்டு - 6 பல்,
கறிமசால் தூள் - 1 தேக்கரண்டி,
சிவப்பு ஃபுட் கலர் - 1/2 தேக்கரண்டி.

சாஸுக்கு:
========
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3,
கறிமசால் தூள் - 1 தேக்கரண்டி,
இஞ்சி - 1/2 அங்குல துண்டு,
கிரீம் - 1/2 கப்,
சர்க்கரை - 1 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
வெண்ணெய் - 50 கிராம்,
கொத்தமல்லி - 1 கைப்பிடி.


 

கோழியை மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தயிரில் கோழிக்கறி, உப்பு, எலுமிச்சை சாறு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிமசால் தூள், கலர் பவுடர் சேர்த்து நன்கு பிசிறி ஃபிரிஜ்ஜில் முந்தின நாளே வைக்கவும்
சாஸ் செய்ய:
தக்காளியை அரைத்து ஜூஸ் எடுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வெண்ணெய் தவிர எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.
வாணலியில் வெண்ணெயை விட்டு உருகியதும், கலந்த கலவையை இதில் போட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும், எலுமிச்சம் பழ சாறு, கொத்தமல்லி தழை தூவி கலக்கி இறக்கவும்.


முதல் நாளே ஊறவைத்து அடுத்த நாள் சுலபமாக செய்து விடலாம். பார்ட்டிக்கு செய்தால் ரிச்சாக இருக்கும். நாண், ரொட்டி, சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்