காளான் தொக்கு

தேதி: January 21, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காளான் - 1 டின்
பல்லாரி - 1 பெரியது
மசாலா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
வரட்டிய இறால் - 10
தேங்காய் பால் - 1/4 கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

பல்லாரி, காளானை சிறிதாக நறுக்கி கொள்ளவும் .
சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் .
பின் அதில் நறுக்கிய காளான், இறால், பல்லாரியை போட்டு நன்றாக வதக்கவும்.
பின்பு மஞ்சள் தூள், மசாலா தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
மசாலா வதங்கியதும் தேங்காய் பால் ஊற்றி கிளறவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக விடவும்.
காளான் நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நீங்கள் பல்லாரி என சொல்வது வெங்காயத்தை தானே..எந்த ஊர்க்காரர் நீங்கள்..பல்லாரி என்பது ஒரு இடம் என்றும் அங்கு வெங்காயம் விளைச்சல் அதிகம் என்றும் கேட்டிருக்கிறேன்

ஆமாம்.பெரிய வெங்காயத்தை பல்லாரி என சொல்வார்கள் . நீங்கள் குறிப்பிட்ட அந்த ஊரை பற்றி நானும் அவ்வாறே கேள்வி பட்டு இருக்கிறேன்.

தளிகா பெல்லாரி கர்நாடக மாநிலத்தில் உள்ளது. பெல்லாரி வெங்காயம் சற்று காரமாக இருக்கும். அதாவது உரிக்கும்போது சீக்கிரம் கண்ணில் தண்ணீர் வந்து விடும்.
அப்புறம் உங்களின் ஒரு கேள்விக்கு 'பெங்களூர் அவல் இட்லி'யில் பதில் கொடுத்திருக்கிறேன். பார்த்தீர்களா?
அன்புடன்
ஜெயந்தி மாமி