கத்தரி பொரியல்

தேதி: January 21, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - 250 கிராம் (1/4 கிலோ)
வெங்காயம் - ஒன்று
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு, சீரகத்தூள் - அரை சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப்பூ - அரை மூடி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி (தாளிக்க)


 

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நீளவாக்கில் லேசாக நறுக்கிய கத்தரிக்காயை வதக்கவும்.
பிறகு உப்பு, மிளகாய்ப்பொடி, மஞ்சள் தூள், சோம்பு, சீரகப்பொடி போட்டு அரை கிளாஸ் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். வெந்து தண்ணீர் வற்றியவுடன் தேங்காய்ப்பூ போட்டு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்