காராமணி மசாலா

தேதி: January 21, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காராமணி - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய காராமணியை போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் மிளகாய்பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு வேகவிடவும். நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்