வீடு, சொர்க்கமா? நரகமா?

அன்பு நேயர்களே எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கள்? ஒவ்வொறு நாளும் இந்த பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் நாம் ஓடிக்கொண்டிருந்தாலும் நமது மனம் எப்போழுதும் அமைதியான சூழ்நிலையையே எதிர்பார்த்து ஏங்குகின்றது.அதற்க்கு தான் பலர் தாங்கள் வாழும் வீடே சொர்க்கம் என்று கூட சொல்வார்கள். ஆனால் சிலருக்கு துரதிஷ்டவசமாக அந்த சொர்க்கம் நரகமாகிப் போகின்றது. மனைவியைக் கேட்டால் வீட்டை விட்டு வேலைக்கு வருவதே மன அமைதிக்குத் தான் என்பார்கள், கணவனைக்க்கேட்டால் வீடா அது நரகம் அதனால் தான் நான் தினமும் குடித்துவிட்டு போகின்றேன் என்று கூறுவார்கள். குழந்தைகளோ வீட்டை விட்டு எவ்வளவு நேரம் வெளியில் சுத்த முடியுமோ அவ்வளவு நேரம் வெளியில் இருப்பதைத்தான் விரும்புகின்றார்கள்.

இவ்வாறு தாங்கள் வாழும் வீடே இவர்களுக்கு நரகமாகிப் போனதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது ஒருவர் சுதந்திரத்தில் மற்றவர் தலையிடுவதும் அதைவிட ஒருவரை ஒருவர் அதிகாரம் செலுத்துவதும் தான் என்றே நினைக்கின்றேன்.

மனைவி நினைக்கின்றாள் கணவன் தான் நினைப்பதுப் போல் தான் நடக்க வேண்டும். சினிமாவில் காட்டும் காட்ச்சிகளைப் போல் கணவன் அமைய வேண்டும். அவ்வாறு நடக்காவிட்டால் அவன் மீது கோபம் கொள்வது, சந்தேகம் கொள்வது. மேலும் அவனுடைய தனிப்பட்ட விசயங்களில் தலையிட்டு அதில், திருப்தியான பதில் கிடைக்காவிட்டால் அந்த கோபத்தை சாப்பாட்டில் தொடங்கி பிள்ளைக்ளைச் சென்றடைந்து அதன் பிறகும் முடியாது அடுத்த நாளும் நீடிக்கும். ஏன் இந்த அதிகப்பிரசங்கி தனம். கணவன் அவ்வாறு கூற விரும்பாத விசயங்களைக் கேட்டு தெரிந்துக் கொள்வதில் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும், இவ்வாறு இன்னும் ஏராளமான விசயங்களில் பெண்கள் குடும்பத்தின் அமைதியை குலைக்க செய்யக்கூடாதது நிறைய்ய இருக்கின்றது.

அதேப்போல் கணவனுக்கு தன் மனைவி வேறொரு வீட்டில் இருந்து வந்தவள் என்ற உணர்வே இருக்காது,வீட்டில் மனரீதியாக அவளுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வெளியில் காட்டாமல் இருந்தால் அவள் நல்ல மனவி,எதையாவது கேட்டு விட்டால் சண்டைக்காரி.ஏன் இந்த பாராபட்சம். அவனுடைய தாய் தந்தை கூடப் பிறந்தவர்கள் எங்கோ இருப்பார்கள் அவர்களுக்காக மனைவியிடம் வாக்குவாதம் செய்து வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு பிறகு, வீட்டிற்கு போனாலே சண்டை தான் என்று புலம்புவது.

குடும்பத்தின் முக்கிய நபர்களான குழந்தைகளுக்கு வீட்டில் அவர்களுக்குத் தேவையான சுதந்திரம் மறுக்கப்படுவது.
தாயார் ஒரு கட்டுத்திட்டமும், தந்தை அதற்கு நேர்மாறான கட்டுத்திட்டமும் போட்டு குழந்தைகளை குழப்புவது.
வீட்டில் அவர்களுக்குறிய கடமைகளைச் சொல்லி வளர்க்காமல் இருந்து விட்டு கடைசியில் கடமைதவறும் பொழுது அவர்களைக் கண்டித்து ஒதுக்குவது.இது போன்ற விபரீதங்களால் அவர்களுக்கு வீடு என்றாலே ஒரு வெறுப்பு வந்துவிடுவதில் ஆச்சரியமில்லை.

இவ்வாறு ஒட்டு மொத்த குடும்பமும் தங்களின் கடமைகளை மறந்து மற்றவர்களின் செயல்களிலே குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருந்தால் எப்படி அவர்களுக்கு அவர்கள் வாழும் வீடு மகிழ்ச்சிகரமாகவும், அமைதியையும், பாதுகாப்பையும் வழங்க முடியும். வீட்டை விட்டு வெளியில் போகின்றவர்கள் எப்போது மீண்டும் வீட்டிற்க்கு திரும்புவோம் என்று ஏங்க வேண்டும், அதற்கு குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பங்கிருக்கின்றது என்பது என் கருத்து. இவ்வாறு குழந்தை முதல் பெரியவர் வரை குடுபத்தினர் அனைவரும் அவரவரின் உணர்வுகளுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து வாழ்ந்தால் அவர்கள் வாழும் வீடு அவர்களுக்கு உலகத்திலேயே சொர்க்கமான இடமாகி விடும் தானே! அதை நான் ஒத்துக் கொள்கின்றேன், அப்ப நீங்க?

மனோகரி எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு பேசி.
உங்க கருத்து ரொம்ப சரி. நீங்க சொல்வது போல் 'ஹவுஸ்' 'ஹோம்' ஆக ஆவது ஒரு வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் கையிலும்தான் இருக்கிறது. அதிலும் முக்கியமாக வீட்டுத் தலைவியின் பங்கு அதிகம்தான். வாழ்க்கை என்பது ஒருமுறைதான். இதை நல்ல முறையில் வாழ வேண்டும்.

பொன்னேட்டில் பொரிக்க வேண்டிய வரிகள்.
//வீட்டில் அவர்களுக்குறிய கடமைகளைச் சொல்லி வளர்க்காமல் இருந்து விட்டு கடைசியில் கடமைதவறும் பொழுது அவர்களைக் கண்டித்து ஒதுக்குவது//
//இவ்வாறு குழந்தை முதல் பெரியவர் வரை குடுபத்தினர் அனைவரும் அவரவரின் உணர்வுகளுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து வாழ்ந்தால் அவர்கள் வாழும் வீடு அவர்களுக்கு உலகத்திலேயே சொர்க்கமான இடமாகி விடும் தானே!//

வீடு சொர்க்கமாக கடை பிடிக்க வேண்டியவை என்று நான் நினைப்பவை:
1. தாராளமான பாராட்டு - கண்டிப்பதை தனியாக இருக்கும்போதும், பாராட்டுவதை நாலு பேருக்கு முன்னும் செய்ய வேண்டும்.
2. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.
3. இன்றைய கால கட்டத்தில் நன்னடத்தையை விட நல்ல மதிப்பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நன்னடத்தைக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
4. ஒரு முறை எழுத்தாளர் சிவசங்கரி ஒரு பேட்டியில் கூறியது: மொட்டை மாடியில், சுவரில் ஒரு சிறிய விரிசல் இருக்கும் போது ஆலம் விதை விழுந்து முளைக்கும். அதை அப்படியே விட்டு விட்டால் சுவரே இடிந்து விடும். அது போல் கணவன் மனைவிக்குள் ஒரு சிறு விரிசல் வந்தாலும் உள்ளே நுழைய தயாராக இருக்கிறார்கள் சிலர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
5. வெளியில் முகம் தெரியாதவர்களிடமும், அலுவலகத்தில் அதிகாரிகளிடமும், மற்றவர்களிடமும் அட்ஜஸ்ட் செய்துகொள்பவர்கள் சொந்த கணவன், மனைவி, குழந்தைகளிடமும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவேண்டும்.
6. குழந்தைகள் பெரியவர்களைப் பார்த்துத் தான் கற்றுக் கொள்கிறார்கள். எனவே நாம் அவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும்.
"ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு".

பிறருடைய குற்றத்தைபோல் தன் குற்றத்தையும் எண்ணிப்பார்க்கும் தன்மையை பெற்றுவிட்டால் உலகில் உயிர்க்குத் தீமை உண்டாகுமோ?

அன்புத்தோழி, நல்லதொரு கருத்தை முன் வைத்ததற்கு நன்றி. ஏனென்றால் இதைப் படிக்கும்போது நம்மிடம் இருக்கும் தவ்றுகளையும் திருத்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் படிப்பவர்க்குக் கண்டிப்பாக வரும்.
YOU CAN BUILD A HOUSE BUT NOT A HOME

அன்புடன்
ஜெயந்தி மாமி

மனோகரி... படித்தேன் வீடு சொர்க்கமாவது மனைவி கையில் தான் இருக்கிறது. நம் மீது கணவன்மார்களுக்கு மதிப்பு வர நாம் எதையாவது சாதித்து காட்ட வேண்டும். குறிப்பாக நம் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தால் பிறகு நாம்தான் நம் வீட்டிற்கு ராணி. நம் முன்னால் வேண்டுமானால் நம்மை புகழ்ந்து பேச மாட்டார்கள். ஆனால் நாம் இல்லாதபோது நம்மைபற்றி ரொம்ப உயர்வாகத்தான் கூறுவார்கள் நம்முடைய கடின உழைப்பின் மூலம் நம் குடும்பத்தை வசப்படுத்தி விடலாம். நிறைய தியாகம் செய்யவேண்டும். நல்ல பாசிட்டிவ் அப்ரோச் வேண்டும். வாழ்க்கையை ரசித்து வாழவேண்டும். எப்போதும் நல்ல நண்பர்களின் நட்பு வேண்டும். நல்ல நண்பர்கள் என்று நான் கூறுவது அவர்கள் நம்மீது வைத்திருக்கும் அன்பை குறிக்கவில்லை. நல்ல புத்திசாலியான, வாழ்க்கையில் வெற்றிபெற்ற, நம்மைவிட அறிவான நண்பர்களைத்தான் நல்ல நண்பர்கள் என்று கூறுகிறேன்.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

தெய்வந் தொழாஅள் கொழுநள் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
மற்றவர் கருத்திற்கு மரியாதை செலுத்தி குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பேணிக்காத்து நம்மை விட நம் குழந்தைகளை சிறந்தவர்களாக உருவாக்கினால் பிறகு நாம் பெய்- என்று சொன்னால் நம் குடும்பத்தினர் செயற்கை மழையையாவது வரவழைத்து கொடுத்து விட மாட்டார்களா?

மனோகரி அன்ரி,ஜயந்தி மாமி, மாலதி அன்ரி நீங்கள் சொல்வது உண்மையும் அதே நேரம் இப்போதைய இளம் குடும்பங்களுக்கு நல்ல அறிவுரையானதாகவும் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கணவன், மனைவி, பிள்ளைகளுடன் சேர்ந்து அதிக நேரம் கலந்து கதைக்க வேண்டும் அதனால் தான் புரிந்துணர்வு ஏற்படும். புரிந்து கொண்டால் சச்சரவுகளுக்கு இடமிருக்காது. விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும். எதற்கும் உடனுக்குடன் பாய்ந்து சண்டை செய்யக் கூடாது, பொறுமை இருக்க வேண்டும். எந்தப் பெரிய பிரச்சனை வந்தாலும் அதை அன்போடு அமைதியாக அணுகினால் சிறியதாகிவிடும் என்று நான் நினைப்பதுண்டு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

டியர் ஜெயந்தி அக்கா எப்படி இருக்கீங்க?நான் நலமுடனுள்ளேன் நன்றி. ஆமாம் உங்களுடனும் பேசி பல நாட்களூக்கு மேல் ஆகிவிட்டது, இப்போது தான் கொஞ்சம் ரிலாக்ஸாக மீண்டும் அறுசுவையில் பதிவுகள் போடுகின்றேன்.இந்த பதிவு கூட பல நாட்களாக நினைத்தது தான் இப்போது தான் சந்தர்ப்பம் கிடைத்தது, இந்த தலைப்பை ஆமோதித்து தங்கள் கூறியுள்ள கருத்துக்கள் அனைவருக்கும் நல்ல அறிவுரையாக அமைந்துள்ளது. குறளுடன் கூறிய விளக்கம் அருமையாகவும், சொல்ல வந்த விசயத்திற்கு பொருத்தமாகவும் உள்ளது.இது போன்ற குறள்களை எல்லாம் கேட்டு எத்தனையோ வருடங்க ஆயிற்று. அறுசுவை மூலமாக மீண்டும் அவைகளை நினைவுக்கூறுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. மற்றொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திப்போம் நன்றி.

டியர் மாலதி எப்படி இருக்கீங்க? இந்த தலைப்பைச் சார்ந்த தங்களின் அறிவுரைகளுக்கும் கருத்திற்க்கும் மிகவும் நன்றி. அதற்கு பொருத்தமான திருக்குறளின் விளக்கத்திற்க்கு உங்களின் நகைச்சுவையுணர்வு மிகவும் பிடித்திருந்தது. தாங்கள் கூறிய கருத்துக்களை, ஒவ்வொறு பெண்ணும் கடைப்பிடித்தால் பிறகு எல்லாமே சொர்க்கம் தான்.அதைவிட ஒரு மனைவி மனது வைத்தால் எப்பேற்ப்பட்ட நரகமும் சொர்க்கமாகிவிடும் என்பதை மிக அழகாக கூறியுள்ளீர்கள்.நன்றி மீண்டும் சந்திப்போம்.

அறுசுவையின் புது முகமான அதிரா அவர்களே, வருக...வருக...உங்கள் வரவு நல்வரவாகுக. எப்படி இருக்கின்றீர்கள்? தங்கள் கருத்திற்க்கு நன்றி. நீங்கள் கூறியுள்ள, அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை. மேலும் வாழ்க்கையில் வரும் நல்லதோ, கெட்டதோ எதையும் சகித்துக் கொள்ளும் பொறுமையை நாம் வளர்த்துக் கொண்டால் தாங்கள் கூறியுள்ள பொன்மொழியைப் போல் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் அழகாகிவிடும் என்பது நிச்சயம். மற்ற சகோதரிகளின் கருத்துக்களுக்கும் தங்களின் மேலான கருத்தை கூறியதற்க்கு நன்றி,மீண்டும் சந்திப்போம்.

மிக்க நன்றி மனோகரி அன்ரி.
நான் நலம்.தாங்கள் எல்லோருக்கும் உடன் பதில் போட்டீர்கள், எனக்கு தாமதித்ததால், என்னைப் பிடிக்கவிலையோ என்றுகூட ஒரு கணம் நினைத்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

take life as it comes
நல்லதொரு தலைப்பை தந்த மனோகரி மேடம் hats off to u.நான் உங்களை விட எல்லாம் சிறியவள் தான் என் மனதில் உள்ளதை சொல்கிறேன்.நான் என் குடும்பத்தை இப்படி தான் எடுத்து செல்ல வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.வீடு எப்போதுமே சொர்க்கமாக தான் இருக்க வேண்டும்.நாம் ஒவ்வொருக்குள்ளேயும் ஒரு சுதந்திரம் இருக்கவேண்டும்.யாரும் யாரையும் dominate பண்ணாமல் இருந்தாலே குடும்பம் சந்தோஷமாக இருக்கும்.வீட்டில் உள்ள பெரியவர்களை பார்த்து தான் குழந்தைகள் நடந்துக் கொள்வார்கள். அவர்கள் வெளி சூழலுக்கு அறிமுகம் ஆகும் வரை வீட்டில் உள்ளவர்களை பார்த்து தான் வளர்வார்கள்.குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்கு ஒரு முடிவெடுக்கும் தருணம் வரும் போது உங்கள் அனுபவத்தையும் ஆலோசனையும் கூறி விட்டு நீ உன் முளைக்கு செயல்படு என்று விட வேண்டும்.எனக்கு கூட்டு குடும்பம் ரொம்ப பிடிக்கும் நமக்குள்ளே நல்ல புரிதல்,விட்டு கொடுக்கும் சுபாவம் இருந்தால் ஏன் சண்டை வர போகிறது.நான் என் குழந்தைகளுக்கு, நாம் எப்போதுமே மற்றவர்களுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்றே சொல்லி வள்ர்ப்பேன்.தினமும் ஒரு வேளையாவது வீட்டில் உள்ளவர்கள் சேர்ந்திருக்க வேண்டும்.அதிக பேசி இருந்தால் மன்னித்து விடவும். ஏதேனும் தவறாக எழுதியிருந்தால் சொல்லவும் மாற்றி கொள்கிறேன்.ஏனென்றால் வாழ்க்கையில் முதல் படி எடுத்து வைத்திருக்கிறேன் தங்கள் ஆலோசனை எனக்கு தேவை. நன்றி

take life as it comes

ஹாய் சுப்ரியா..நல்ல கருத்துக்கள் நான் சொன்னது போலவே உள்ள கருத்துக்கள்..ஆனால் இது திருமணமான புதிதில் இருந்த கருத்து..மற்ற கருத்துக்களில் மாற்றம் இல்லை.கடைசி கருத்து மட்டும் என்னுடையது மாறிவிட்டது..கூட்டுக் குடும்பம் வேண்டவே வேண்டாம் என்பது தான்.தனிப்பட்ட கருத்து தான் ஆனால் உங்களுக்க்குள் இருக்கும் நல்லெண்ணம் மகிழ்ச்சியளிக்கிரது..எல்லம் உங்கள் வாழ்வில் பலிக்கட்டும் என்று ப்ராத்திக்கிறேன்..எனக்கும் எழுத ஆசையாக இருந்தது என்னவென்று தெரியவில்லை..நீங்கள் பேசி விட்டீர்கள்.நன்றி

தளிகா:-)

take life as it comes
உங்கள் பிரார்த்தனைக்கு மிகவும் நன்றி மேடம். wise men(women)think alike.நான் சொல்வது சரி தானே.அவரவருக்கு தனிப்பட்ட கருத்து இருக்கும் தானே நீங்கள் உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.ஏன் மேடம் கூட்டு குடும்பம் வேண்டாம் என்கிறீர்கள்? இன்னக்கி சமையலுக்கு உங்க ரெசிபி தான் தேடிகிட்டு இருந்தேன் எது செய்யலாம்னு.அதுக்குள்ள உங்க போஸ்டிங் பார்த்தேனா இங்க வந்துட்டேன்.இன்னக்கி செவ்வாய் கிழமை so சைவம் தான்.நான் போய் பார்த்துட்டு வரேன்.

take life as it comes

மேலும் சில பதிவுகள்