பேபிகார்ன் ஃப்ரைடு ரைஸ்

தேதி: January 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பேபிகார்ன் - கால் கிலோ
கேரட் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
பட்டாணி - 50 கிராம்
கொத்தமல்லி - 100 கிராம்
புதினா - 100 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பாசுமதி அரிசி - 2 ஆழாக்கு (400 கிராம்)


 

தேங்காயை பாலெடுத்து அரிசியுடன் சேர்த்து உதிரியாக வடித்து கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பேபிகார்ன், கேரட், பீன்ஸ், பட்டாணி (பச்சை பட்டாணி) ஆகியவற்றை போட்டு சிறு தீயில் வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் கறிமசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி, மல்லி, புதினாவை போட்டு நன்கு வதக்கவும்.
கடைசியாக சாதத்தை கொட்டி கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும். நெய்யை மேலே போட்டு ஒரு முறை கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்