பேபிகார்ன் குழம்பு

தேதி: January 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பேபிகார்ன் - அரை கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 4 சில்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - துளி
கடுகு - ஒரு தேக்கரண்டி


 

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் நீளமாக நறுக்கிய பேபிகார்ன் போட்டு வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய்ப்பொடி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு கிளறி, புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.
தேங்காயை பாலெடுத்து, குழம்பு நன்கு கொதித்தவுடன் ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்