தம்மடை

தேதி: January 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவை - 1/2 கிலோ
சீனி - 600 கிராம்
முட்டை - 2
அக்மார்க் நெய் - 350 கிராம்
தேங்காய் பால் டின் - 4
பால் - 1 கப்
முந்திரிப்பருப்பு - 25
பிஸ்தா - கைபிடியளவு
பாதாம் பருப்பு - 25


 

முட்டையை அடித்து கலக்கி அரிப்பை வைத்து வடிகட்டி கொள்ளவும்
ரவையில் தேங்காய் பால், பசும்பால், முட்டை சேர்த்து காலையிலேயே ஊற வைத்து விடவும் .
5 மணி நேரம் கழித்து சீனியை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பிஸ்தா, பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து தோலுரித்து வைக்கவும்.
பின் 3 பருப்புகளையும் வெட்டி வைத்து கொள்ளவும் .
சிறிது நேரத்திற்கு ஒரு முறை மாவை கலக்கி விடவும்.
மாவு இளக்கமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
மாலையில் சேர்த்து வைத்த மாவில் நெய் அனைத்தையும் ஊற்றி விடவும்.
பெரிய சட்டியில் மாவை ஊற்றி அடுப்பில் வைத்து பெரிய கரண்டியால் கலக்கி கொண்டே இருக்கவும்.
மிதமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறி கொண்டே இருக்கவும்.
1/2 மணி நேரத்திற்கு பிறகு நெய்யை கக்க ஆரம்பிக்கும் போது சற்று நேரத்திக்கு ஒரு முறை கிண்டி விட்டால் போதும்.
தம்மடை நன்றாக வெந்து வரும்போது பருப்புகளை தூவி விடவும்.
தம்மடை தேவையான பொன் நிறத்திற்கு வந்ததும் இறக்கி விடவும்.
எண்ணெய் வடிகட்டியில் தம்மடையை 4 மணி நேரம் வைத்து விட்டால் எண்ணெய் வடிந்து விடும் .
இந்த சுவையான தம்மடை காற்று புகாமல் பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து வைத்தால் அதிக நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும்.


தம்மடை செய்யும் போது கண்டிப்பாக அக்மார்க் நெய் அல்லது வீரா நெய் பயன்படுத்த வேண்டும் . சாதாரண நெய் ஊற்றினால் மணமும் சுவையும் குறைந்து விடும்.

மேலும் சில குறிப்புகள்