மட்டன் கபாப் (BBQ) - Arabic type

தேதி: January 22, 2008

பரிமாறும் அளவு: ஆறு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

மட்டன் கீமா (அ) பீஃப் கீமா - ஒரு கிலோ
பட்டர் - ஐம்பது கிராம்
சீரக தூள் - மூன்று தேக்கரண்டி
மிளகு தூள் - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
செலரி இலைகள் - ஒரு கப் பொடியாக நறுக்கியது
லெமென் ஜூஸ் - இரண்டு தேக்கரண்டி
வெங்காயம் - மூன்று
இஞ்சி பூன்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி


 

கீமாவை சுத்தம் செய்து ஒரு துணியில் கட்டி தண்ணீர் முழுவதையும் வடிகட்டவும்.
வெங்காயத்தை அரைத்து வடிகட்டிய கீமாவில் சேர்த்து அதில் உப்பு, மிளகு தூள், சீரக தூள், பேக்கிங் பவுடர், இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய செலரி இலைகள், லெமன் ஜூஸ், பட்டர் எல்லாவற்றையும் கீமாவில் சேர்த்து பிரட்டி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு ஒரு கை நீளத்திற்கு கபாப் செய்யும் குச்சியில் சொருகி பிடித்து பார்பி கியூ செய்யும் அடுப்பில் தீ மூட்டி சுட்டெடுக்கவும்.
கபாப் சுட்டதும் குபூஸ், ஹமூஸுடன், லெட்டுஸ் இலைகளையும் சேர்த்து சாப்பிடவும்.


துபாயில் குளிர் காலம் தொடங்கி விட்டால் எல்லா பார்க்குகளும் நிறைந்து வழியும். முக்கியமாக, அரேபியர்கள் விரும்பி சாப்பிடும் கபாப் இது.
பார்பிகியூ அடுப்பில் பார்க்கில் செய்யும் கபாப் இது. துபாயில் அரபிகள் மிகவும் விரும்பி செய்வது இந்த கபாப் அவர்கள் அதிக காரம் சாப்பிட மாட்டார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

bbqவை microwave oven la செய்யலமா,கண்டிப்பாகbaking powder போட வேன்டுமா!சொல்லுங்கள் அக்கா
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

டியர் ரிஜ்வாணா BBQ
மைக்ரோவேவில் கன்வென்ஷன் இருந்தால் அதில் செய்யுங்கள், இல்லை குக்கிங் ரேஞ்சிலும் செய்யலாம்.
பேக்கிங் பவுடர் அது குச்சியில் சொருகி செய்யும் போது புஸ்ஸுன்னு வரும் அதுக்குதான் உங்களுக்குபிடிக்க வில்லை என்றால் விட்டு விடவும்.

கீமாவில் இருந்து சுத்தமா தண்ணீர் நல்ல வடிய இரவே ஒரு மெல்லிய துணியில் கட்டி தொங்க விடலாம்.

ஜலீலா

Jaleelakamal

அஸ்ஸலாமு அலைக்கும்,கண்டிப்பாக கீமா வாங்கி இந்த receipeயை செய்து பார்க்க வேண்டும்.baking powder என்பது bajji மாவில் போடுவோமே அதுவா இல்லை இது வேறா,என் LG microwave ovenல் convention,grill option உண்டு,எவ்வளவு நேரம் preheat&cooking time கூருங்கள் pls.நான் microwave ovenக்கு முன்னர் கூறியது போல புதுசு....... கீமா fridgeக்கு வெளியே துண்யில் கட்ட விட வேண்டுமா or fridgeக்குள் துணியில் கட்டி பாத்திரத்தில் வைத்து விட வேண்டுமா.....
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

பேக்கிங் பவுடர் என்பது கேக்குக்கு போடுவது, கீமா கழுவி தண்ணீரை வடிகட்ட ஒரு மெல்லிய துணியில் கட்டி தொங்க் விட்டால் நல்ல டிரை ஆகும் , இல்லைஎன்றால் தண்ணீர் ஊறி கொண்டே இருக்கும்.
பிரிட்ஜிக்குள் இல்லை வெளியில் தான்

ஜலீலா

Jaleelakamal

அக்கா எங்க வீட்டில் பார்பிகூ செய்யும் அடுப்பும் கிரில் அவனோ இல்லை. நான் எப்படி கபாப் செய்வது? செலரி இலைகள் என்றால் என்ன? அது சென்னையில் கிடைக்குமா? எனக்கு தெரிந்த ஒரு பெண்(முஸ்லிம்) பேகிங் பௌடர் யூஸ் பண்ணக்கூடாது அதில் பன்றி கொழுப்பு சேர்ந்துள்ளது என்று சொன்னாள். நானும் எத்தனையோ வெப் சைட்டில் தேடிப்பார்த்துவிட்டேன். அப்படி சேர்த்ததாக தெரியவில்லை. நீங்கள் தெரிந்தால் சொல்லுங்களேன். எனக்கு ஹலால் ஹராம் பற்றி அறிய E code NUMBERS தேவை. அதை பற்றியும் எனக்கு பதிவு அனுப்புங்கள்.

டியர் அரசி வா அலைக்கும் அஸ்ஸலாம்
இது கிரில் பார்பிகியு அடுப்பு இல்லை என்றால் சாதாரணமாக கறி வடை பொரிப்பது போல் பொரித்தெடுங்கள்.
இங்கு நிறைய சாலட் இலைகள் கிடைக்கும் இந்தியாவில் பெரிய பெரிய டிப்பாட்மெண்டல் ஸ்டோர்ஸில் இருக்கும் என்று நினைக்கிறேன். வெணுமானால் மர்லியாவை கேட்டு பாருங்கள்,
பேக்கிங் பவுடர் இல்ல பா நீங்க சொல்வதை இப்ப தான் கேள்விபடிகிறேன்.
ஆனால் கேக், பஜ்ஜி, பிச்கேட் எல்லாத்த்துக்கும் சேர்க்கிறோம். அதை பற்றி எனக்கு எனகு தெரியல யாராவது தெரிந்தால் பதில் பொடுவார்கல்.
எதுகும் ஒரு திரெட் தனியா தொடங்குங்கள் தெரிந்தவர்கள் அங்கு பதில் கொடுப்பார்கள்.
ஜலீலா

Jaleelakamal

JAZAK ALLAH KHAIR