மட்டன் கபாப் (BBQ ) - Indian Type

தேதி: January 22, 2008

பரிமாறும் அளவு: ஆறு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டன் கீமா (அ) பீஃப் கீமா - ஒரு கிலோ
ஆலிவ் ஆயில் - கால் கப்
பச்சை மிளகாய் - எட்டு
கொத்தமல்லி தழை - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
லெமென் ஜூஸ் - மூன்று தேக்கரண்டி
வெங்காயம் - மூன்று
பூண்டு பவுடர் - ஒரு மேசைக்கரண்டி (அ)
ஆறு பல் பூண்டு (அரைத்து கொள்ளவும்)
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி


 

கீமாவை சுத்தம் செய்து ஒரு துணியில் கட்டி தண்ணீரை நல்ல வடிகட்டவும்.
கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயத்தை நன்றாக அரைத்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மசாலாக்களையும் வடித்த கீமாவில் சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
பிறகு பார்க் எடுத்து சென்று பார்பிகியு செய்யும் அடுப்பில் தீ மூட்டி கபாப் சுடும் கம்பியில் சொருகி சுட்டெடுக்க வேண்டும்


குளிர்காலம் ஆரம்பித்து விட்டால் போதும் துபாயில் உள்ள பார்க் முழுவதும் பார்பிகியு தான் சிக்கன் (அ) மட்டன் கபாப் டிக்கா, ப்ரை போன்றவை அவரவர் விருப்பபடி செய்வார்கள்
பார்பிகியு அடுப்பில் பார்க்கில் செய்யும் கபாப் இது. துபாயில் நம் இந்தியர்களும் இந்தியன் ஸ்பிஸி மசாலா போட்டு செய்வார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

OLIVE OIL எப்பொழுது சேர்க்க வேண்டும். அறுசுவைக்கு குறிப்புகள் அனுப்புவது எப்படி?

டியர் அரசி இதை பார்பிகியு அடுப்பில் சுடுவதால் எண்ணையும் அதிலேயே சேர்த்து கலந்து கொள்ளனும்,நீங்கள் எண்ணை ஊற்றி பொரிப்பதால்
எண்ணை கொஞ்சம் கம்மி பண்ணி கொள்ளுங்கள்.
குறிப்பு அனுப்ப முகப்பில் இன்ஸ்ட்ரக்ஷன் இருக்கு பாருங்கள் .
இடது புறத்தில் குறிப்பு அனுப்ப என்பதை கிளிக் செய்யுங்கள்,
உஙக்ளுக்கு புரியும். இல்லை அட்மினுக்கு அனுப்புங்கள்
ஜலீலா

Jaleelakamal

குறிப்புகளை அட்மினுக்கு மெயில் பன்னுங்கள் உக்னக்ளுக்கு தெரிந்ததும் நீங்களே ஆட் பண்ணிகொள்ளலாம்.
ஜலீலா

Jaleelakamal

O.K. AKKA