வெந்தயக்களி

தேதி: January 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இட்லி அரிசி - 2 ஆழாக்கு
வெந்தயம் - 3 தேக்கரண்டி


 

இட்லி அரிசி, வெந்தயம் இரண்டையும் தனித்தனியே முதல் நாள் இரவே ஊறவைக்கவும். காலையில் கிரைண்டரில் முதலில் வெந்தயத்தை நசுங்கும் வரை அரைக்கவும்.
பின் அரிசியை சேர்த்து மையாக அரைத்து உப்பு சேர்த்து கரைக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் 4 கிளாஸ் தண்ணீரை கொதிக்க விட்டு மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கை விடாமல் கிளறி வெண்ணெய் போல் சுருண்டு வரும் போது இறக்கவும். (தண்ணீர் தேவைபட்டால் சுடுதண்ணீர் ஊற்றி கிளறவும்.)
இந்த களியின் நடுவில் தூளாக்கிய வெல்லத்தை போட்டு நல்லெண்ணெய் விட்டு தொட்டு சாப்பிடலாம். சுவையாக இருக்கும். குழம்பு தொட்டும் சாப்பிடலாம்.


இதை வாய்ப்புண் வந்தவர்கள் செய்து சாப்பிட்டால் உடனே குணமாகும். உடல் சூடு குறையும்.

மேலும் சில குறிப்புகள்