கேழ்வரகு மோர்க்களி

தேதி: January 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

கேழ்வரகு மாவு - 2 ஆழாக்கு
மோர் - 4 கிளாஸ்
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - ஒரு சிறுதுண்டு
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

கேழ்வரகு மாவுடன் உப்பு, மோர் சேர்த்து கரைக்கவும். வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.
அதில் 4 கிளாஸ் தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்தவுடன் மாவை ஊற்றி கிளறி வெந்தவுடன் இறக்கவும். இது சாப்பிட சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்