வாழைக்காய் மீன் வறுவல் (வெஜிடபிள்)

தேதி: January 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
அரைக்க:
தேங்காய் - 2 சில்
வரமிளகாய் - 4
சீரகம் - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 2 பல்


 

வாழைக்காயை விரல் நீளத்திற்கு சற்று கனமாக நறுக்கி உப்பு சேர்த்து அரைவேக்காடாக வேக விட்டு தண்ணீரை வடித்து விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெந்த வாழைக்காயை சிப்ஸ் போல் கொஞ்சம் கொஞ்சமாக பொரித்தெடுக்கவும். (முறுகலாகக்கூடாது)
பின் கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கருவேப்பிலை அரைத்த மசலாவை போட்டு சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும். மசாலா வதங்கியவுடன் வறுத்த வாழைக்காய்களை கொட்டி கிளறி இறக்கவும்.


விருந்துகள், விஷேசங்களில் இந்த வாழைக்காய் செய்வார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வணக்கம்

இன்று இந்த வறுவலை செய்தேன். வித்தியாசமான சுவையுடன் அருமையாக இருந்தது. சரஸ்வதி திருஞானம் அவர்களுக்கு நன்றி மற்றும் பாரட்டுக்கள். அருசுவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். சமையல் என்பது எவ்வளவு அருமையான உற்சாகமான கலை என்பதை அனுபவப்பூர்வமாக உணர அருசுவை இணையதளம் உதவுகிறது. அட்மின் அவர்களுக்கு நன்றிகள்.

அன்புடன்,
ஆயிஸ்ரீ

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
ஆயீஸ்புகழ்
நான் அழைக்கும் பெயர் சரியா. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் அறுசுவை பார்த்தேன். தாங்கள் வாழைகாய் மீன் வறுவல் செய்து பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி.
சமையல் ஒரு சிறந்த கலை. பலவித ரெசிப்பிகளை ரசித்து செய்து கொண்டேயிருந்தால் நாமே சமையல் வல்லுனர் ஆகிவிடலாம்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
ஆயீஸ்புகழ்
நான் அழைக்கும் பெயர் சரியா. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் அறுசுவை பார்த்தேன். தாங்கள் வாழைகாய் மீன் வறுவல் செய்து பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி.
சமையல் ஒரு சிறந்த கலை. பலவித ரெசிப்பிகளை ரசித்து செய்து கொண்டேயிருந்தால் நாமே சமையல் வல்லுனர் ஆகிவிடலாம்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி அவர்களுக்கு வணக்கம்,
இன்று தான் உங்கள் பதில் பார்த்தேன்.
என் பெயர் ஆயிஸ்ரீ. ஆயில்யம் நட்சத்திரம், அம்மன் என்று என் அப்பா ஒரு பெயரை உருவாக்கி விட்டார்கள். தங்கள் பதிலுக்கு மிகுந்த நன்றி. உண்மையாகவே சமையல் எதோ மாயாஜாலம் என்று தான் இருந்தேன். இப்பொழுது அருசுவையைப் பார்த்து மைசூர்பாகெல்லாம் செய்கிறேன். உங்களது ஊக்கமூட்டும் வார்த்தைகள் உண்மையே...
நன்றிகளுடன்,
ஆயிஸ்ரீ புகழேந்தி

அன்புடன்,
ஆயிஸ்ரீ

பெயர் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது.
ஆயிஸ் என்பது முஸ்லிம் பெயர் மாதிரி தெரிகிறது.
அதுதான் ஒன்றும் புரியவில்லை. மைசூர்பாகு செய்ய எனக்கு தெரியாது. மைசூர்பாகு செய்யதெரிந்தால் எல்லா சமையலும் ஈஸியாக செய்யவரும். வாழ்த்துக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

வணக்கம் ...
இந்து மதம் தாங்க... யாருக்கிட்டேயும் புதிதாக பேசும்போது எல்லாருமே பெயர்க் காரணம் தான் கேட்பார்கள். நான் பிறந்த நட்சத்திரத்தில் இருந்து அப்பா பேர் வைத்தார் என்று சொல்வேன். மைக்ரோவேவ் மைசூர்பாகு தாங்க செய்தேன். நேரிடையாக அடுப்பில் செய்யும் அளவு நான் இல்லங்க... நப்பாசைக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். (மைசூர்பாகு செய்தேன்னு) :-)
அதன் லிங்க் http://www.arusuvai.com/tamil/node/2591
விருந்தாளிகள் வரும்போது அளவு அதிகமாக சமைக்கும் போது சிறிய சொதப்பல்கள் செய்து விடுகிறேன்...

நன்றிகளுடன்
ஆயிஸ்ரீ புகழேந்தி

அன்புடன்,
ஆயிஸ்ரீ