பீர்க்கங்காய் கூட்டு

தேதி: January 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பீர்க்கங்காய் - கால் கிலோ
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
பயத்தம்பருப்பு - 50 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வரமிளகாய் - 6
தேங்காய் - ஒரு சில்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

தேங்காய், மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைக்கவும். பருப்புகளை மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும்.
வெந்தவுடன் நறுக்கிய காயை போட்டு, உப்பு, அரைத்த மசாலா சேர்த்து வேகவிடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கூட்டில் கொட்டி கொதித்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரொம்ப நன்றாக இருந்தது. நன்றி.