காலிஃபிளவர் மிளகு வறுவல்

தேதி: January 22, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காலிஃபிளவர் - 1 (சிறியது),
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
மிளகு தூள் - 1 தேக்கரண்டி,
மைதா மாவு - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 2 தேக்கரண்டி.


 

காலிஃபிளவரை சிறியதாக நறுக்கி, வெந்நீரில் போட்டு 5 நிமிடம் வைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு காய்ந்த பின், சீரகம் தாளிக்கவும்.
மைதா மாவை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
உடனே காலிஃபிளவர் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
பாதி வெந்ததும், உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.
காய் முழுவதும் வெந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்விம்மா இன்னிக்கு உங்களோட காலிபிளவர் மிளகு வறுவல் செய்தேன்.ரொம்ப நல்லா இருக்கும்சுலபமாவும் செய்ய முடியுது.தேங்க்யூம்மா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு கவி,
நலமா? ஒருவழியா நெட் கனெக்ஷன் கிடைச்சு பதில் போட தாமதம். மன்னிக்கவும். பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வியக்கா,
இன்று வேலை பளு காரணமாக எதாவது ஈசியாக செய்ய தேடி, உங்க தேங்காய் சாதம் செய்தேன். கூட தொட்டுக்கொள்ள தேடினபோது இந்த வெரி ஈசி வறுவல் ரெஸிப்பி கிடைத்தது. என்னிடம் காலிப்ளவர் இல்லை, அதனால் என்ன?, உடனே அதற்கு பதில் ப்ரொக்காலி போட்டு செய்து பார்த்தேன்.
சுவை நன்றாக, இந்த சாதத்திற்கு மேட்சாக இருந்தது!. மிக்க நன்றி செல்வியக்கா!.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு ஸ்ரீ,
பாராட்டுக்கு நன்றி. தேங்காய் சாதமும் மிளகு வறுவலும் பொருத்தமான இணை. காலிப்ளவரும் ப்ரோக்கோலியும் ஒரே மாதிரி சுவைதான்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.