மாரி பிஸ்கட் டிலைட்

தேதி: January 22, 2008

பரிமாறும் அளவு: 4 மணி நேரம்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாரி பிஸ்கெட் - 10,
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி,
கோகோ பவுடர் - 3 தேக்கரண்டி,
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
நாட்டு சர்க்கரை - 1 மேசைக்கரண்டி,
உலர்ந்த திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி - 1/2 கப்,
கன்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்.


 

வெண்ணெயை சூடான தண்ணீரின் மேல், ஒரு பாத்திரத்தில் வைத்து உருக விடவும்.
வெண்ணெய் உருகியதும் சர்க்கரை, நாட்டுச்சர்க்கரை, கோகோ மூன்றையும் சேர்த்து கலக்கவும்.
பிஸ்கட்டை நைசாக பொடித்து அதனுடன் சேர்க்கவும்.
பழவகைகளையும் கன்டென்ஸ்டு மில்க்கையும் சேர்த்து உருட்டும் பதத்திற்கு கலக்கவும். (சப்பாத்தி மாவு போல).
சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து ரோலாக்கவும்.
பட்டர் காகிதத்தில் சுருட்டி, 4 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
பிறகு எடுத்து வில்லைகளாக நறுக்கி டப்பாவில் போட்டு, ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டு, தேவையான போது எடுத்து சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நாட்டு சர்க்கரை என்றால் என்ன‌?

இது ஹாய்சின்ங் சுகரா?

ஐஸிங் சுகர் இல்லை என்று நினைத்திருந்தேன். அதைத் தான் முதலில் இங்கு பதிவிட்டிருந்தேன்.

http://www.arusuvai.com/tamil/node/27548 -ல் //நாட்டுச் சர்க்கரை – இது சீனி மாதிரி தூளாக இருக்கும். எலுமிச்சம்பழ ஜூஸ், பானகம் இதிலெல்லாம் சேர்ப்பாங்க.// என்று சீதா சொல்லியிருக்காங்க. ஆகவே confectioner's sugar என்று சொல்ல வந்தேன். :-)

விக்கிபீடியாவோ இரண்டும் ஒன்றுதான் என்கிறது. :-)

இங்கு ஐஸிங் சுகர் - மாவாகவும் கன்ஃபக்க்ஷனர்ஸ் சுகர் - வெள்ளைச் சீனியைப் பொடித்த மாதிரியும் கிடைக்கிறது.

‍- இமா க்றிஸ்

புரித்தது.