வெஜிடபிள் நூடுல்ஸ்

தேதி: January 22, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.1 (12 votes)

நூடுல்ஸ் - 100 கிராம்,
பெரிய வெங்காயம் - 3,
பச்சை மிளகாய் - 3,
கேரட் - 1,
கோஸ் - 100 கிராம்,
குடமிளகாய் - 1,
வெங்காயத்தாள் - 3,
பீன்ஸ் - 5,
தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி,
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி,
சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி (அல்லது) வெள்ளை மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி,
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.

1/2 லிட்டர் தண்ணீர் கொதிக்க விட்டு நூடுல்ஸை போட்டு, வேக வைக்கவும்.
வெந்தவுடன் தண்னீரை வடித்து விட்டு, குளிர்ந்த நீரில் ஒரு முறை அலசி , 1 மேசைக்கரண்டி எண்ணெய் கலந்து பிரட்டி வைக்கவும்.
வெங்காயம், மற்ற காய்களை சன்னமாக, நீளமாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும்.
காய்களை நல்ல தணலில் வதக்கவும்.
பாதி வெந்தது போல் இருக்கும் போது எல்லா சாஸ் வகைகளையும் சேர்த்து கிளறவும்.
நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறி, சூடேறியதும் இறக்கவும்.

மேலும் சில குறிப்புகள்

Comments

செல்வி மேடம்,

நான் அறுசுவையில் புதிதாக இணைந்துள்ளேன்.ஆனால் பல நாட்கள் பார்வையிட்டுள்ளேன்.உங்கள் ரெஸிபிக்களின் எண்ணிக்கை எனக்கு பிரமிப்பைத் தருகிறது,மேலும் தெளிவாகவும் உள்ளன.நூடில்ஸ் என்னைப் போன்ற பேச்சுலர்களுக்கு குறுகிய நேரத்தில் செய்யக் கூடிய, சுவையான உணவு.நான் செய்து விட்டு சொல்கிறேன்.இதில் தாங்கள் பயன்படுத்தி இருக்கும் பெரிய வெங்காயம்,கேரட், குடமிளகாய் போன்றவற்றிற்கு கிராம் அளவு தாருங்களேன்.தக்காளி சாஸ் என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளது தக்காளி கெட்சப் - ஆ.விளக்கம் தருவீர்களா மேடம்.

ஜோயல்.

ஹாய் ஜோயல்,
தங்கள் வரவு நல்வரவாகுக.
உங்கள் பாராட்டுக்கு நன்றி. கிராமிலும் அளவுகள் கீழே தருகிறேன். மேலும், தக்காளி சாஸ் இல்லாத சமயங்களில் தக்காளி கெட்சப்பையும் பயன்படுத்தலாம். தக்காளி சாஸும் தக்காளி கெட்சப்பும் வேறு வேறு.
பெரிய வெங்காயம் - 150 கிராம்,
கேரட் - 50 கிராம்,
குடமிளகாய் - 75 அல்லது 100 கிராம்,
பீன்ஸ் - 25 - 50 கிராம் வரை.
விளக்கம் போதுமென நினைக்கிறேன். நன்றி. (உங்களுடைய ஃப்ரொபைலை கொஞ்சம் முழுமையாக்கி விடுங்கள்).
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம்,

தங்களின் உடனடி பதிலுக்கு மிக்க நன்றி. உங்கள் நூடில்ஸ் செய்து விட்டேன்.டேஸ்ட்டாக இருந்தது.மிக்க நன்றி.என் பிரெண்ட்ஸ்-ம் விரும்பி சாப்பிட்டார்கள்.உங்களிடம் தேங்க்ஸ் சொல்ல சொன்னார்கள்.
உங்கள் எண்ணை கத்திரிக்காய் குழம்பு செய்தேன்.எனக்கு சரிவர வரவில்லை.என்ன பிழை செய்தேன் என்று தெரியவில்லை.எண்ணை கத்திரிக்காய் குழம்பு ரெஸிபியில் நன்கு தூளாக்கிய வெல்லம் போட்டால் டீஸ்பூன் அளவில் எவ்வளவு யூஸ் பண்ண வேண்டும்.புளி கிராம் அளவில் சொல்லுங்களேன்.திரும்ப முயற்சிக்க விரும்புகிறேன்.தயவு செய்து விளக்குவீர்களா?

ஜோயல்

அன்பு ஜோயல்,
நலமா? உங்கள் பாராட்டுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
சாரி, அறுசுவைக்கு வராததால், என்னால் உடனே பதில் கொடுக்க முடியவில்லை.
எண்ணெய் கத்தரி குழம்பு எப்படி வந்ததுன்னு சொன்னால், என்ன குறைன்னு சொல்வேன். இருந்தாலும் என் யூகம்,
1) புளி அதிகமாயிருக்கலாம்.
2) வெங்காயம் குறைவாக தேங்காய் அதிகமாகி இருக்கலாம்.
3) தனியா தூள் அதிகமாகி இருக்கலாம்.
தூளாக்கிய வெல்லம் என்றால், 2 தேக்கரண்டி போடலாம். புளி 25லிருந்து 30 கிராம் வரை சேர்க்கலாம். இன்னும் ஏதும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி சகோதரி அவர்களுக்கு,

தங்களின் தெளிவான பதிலுக்கு மிக்க நன்றி. எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு என் பேவரைட் டிஷ்.நான் மொத்தத்தில் முக்கால் டீஸ்பூன் அளவு தூளாக்கிய வெல்லம் உபயோகப்படுத்தினேன். வெங்காயம்,தனியா தூள் தாங்கள் கூறியிருந்த அளவு தான் யூஸ் பண்ணிணேன். அதே போல் நீங்கள் 1 டம்ளர் நீரில் மொத்தத்தில் கூட்ட சொல்லி இருந்தீர்கள்.1 டம்ளர் நீரில் கூட்டிய பிறகு செக் பண்ணிய போது,புளிப்பு எனக்கு அதிகம் தெரிந்தது.அதனால் கூட 1 டம்ளர் நீர் ஊற்றினேன்.தேங்காய் துருவலாக தான் எனக்கு கிடைத்தது.அதிலிருந்து சேர்த்தேன்.தேங்காயில் கூட,குறைய சேர்த்திருப்பேனோ என்று தோன்றுகிறது.தேங்காய் துருவலாக என்றால் எவ்வளவு டீஸ்பூன் என்று சொல்வீர்களா. எதில் பிழை செய்திருக்கிறேன் என்று தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கூறுவீர்களா.நீங்கள் பதில் கூறியவுடன் மறுபடியும் செய்கிறேன்.

நன்றி.

அன்பு சகொ. ஜோயல்,
தங்களின் விடாமுயற்சி சந்தோஷமளிக்கிறது.
வெல்லம் இன்னும் கொஞ்சம் சேர்த்தால் புளியின் வெடிப்பு அடங்கும்.
இயற்கையாகவே சில புளி வகை ரொம்ப புளிக்கும். அப்ப புளி அளவை குறைச்சுக்கணும்.
தேங்காய் துருவல் பரவாயில்லை. 4 அல்லது 5 மேசைக்கரண்டி அளவு எடுக்கலாம். (தேங்காயை துருவி அளக்க வைத்து விட்டீர்களே:-))
இந்த குழம்பு திக்காக இருக்க வேண்டும், (தயிர் போல)
தண்ணியாக இருந்தால் சுவை குறையும். மீண்டும் ஒரு முறை செய்து பார்த்தத சொல்லுங்கள். நன்றி.
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

தங்களின் பிஸி அலுவல்களுக்கிடையிலும்,நேரம் ஒதுக்கி தெளிவான, உடனடி பதில் தந்தமைக்கு மிக்க நன்றி.விரைவில் செய்து விட்டு எண்ணை கத்திரிக்காய் குழம்பு ரெஸிபியின் கீழ் பின்னூட்டம் அனுப்புகிறேன்.

மீண்டும் நன்றியுடன்,
ஜோயல்

செல்வியக்கா, இது உங்கள் முறைப்படியே செய்தேன், குடை மிளகாய் மட்டும் சேர்க்கவில்லை(வீட்டில் இருக்கவில்லை) ஒருவித நல்ல வாசம் இதில் தெரிந்தது. நான் அடிக்கடி நூடில்ஸ் செய்வேன், ஆனால் இதில்தான் உள்ளி, இஞ்சி சேர்த்தேன் அது ஒரு புறிம்பான சுவைதான் (நான் வழமையில் சேர்ப்பதில்லை). படம் இணைத்துள்ளேன்.

எனக்கு நேற்று பதில் போட முடியவில்லை. இன்று ஒரே தலை இடி + கண் குத்தாக இருக்கிறது, அதனால் பதிலை போட்டுவிட வேண்டும் என்று வந்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா,
நலமா? பாராட்டிற்கு நன்றி. நான் வழக்கமாக இப்படித்தான் செய்வேன். திகட்டாமல் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட முடியும்.
தலை இடியும், கண் குத்தும் இருந்தால் ஆவி பிடியுங்கள், சரியாகும். தண்ணீரில் கைப்பிடி உப்பு, ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி காப்பித்தூள் சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சகோதரி அதிரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த நூடுல்ஸ் படம்:

<br />
<img src="files/pictures/noodles.jpg" alt="veg noodles" />

ஹாய் செல்வி ஆன்டி எப்படி இருக்கிங்க? உங்க உடல்நிலை இப்போ சரியாகிவிட்டதா? நல்லா ரெஸ்ட் எடுங்க தேங்ஸ் ஆன்டி உங்க வெஜ் நூடுல்ஸ் செய்தேன் ரெம்ப நல்லா இருந்ததது வீகென்ட் பார்ட்லாக் இருந்தது நான் இதை செய்தேன் எல்லா பிரண்ட்ஸ்க்கும் பிடித்திருந்தது உங்களுடைய தக்காளி குருமாவும் செய்தேன் நல்லா இருந்தது எல்லாரும் ரெசிப்பி கேட்டுருக்காங்க தேங்ஸ் ஆன்டி உடம்பை நல்லா பார்த்து கொள்ளுங்க

அன்பு ஸ்வேதா,
மன்னிக்கவும்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அறுசுவைக்கே வரலைப்பா. இப்ப சிறிது பரவாயில்லை. பூரண குணம்னு சொல்ல முடியாது.
இந்த குறிப்பு உனக்கு மட்டுமல்லாது, ஃபிரண்ட்ஸ்க்கும் சேர்த்து பிடித்ததில் மகிழ்ச்சியே. இரண்டு குறிப்பின் பாராட்டுக்கும் மிக்க நன்றி. நலம் விசாரித்த உனதன்புக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி உங்கள் குறிப்பைப்பார்த்து இன்று காலை இந்த நூடுல்ஸ் செய்தோம்.சுவை அருமை.என் மகன் விரும்பி சாப்பிட்டார்.அருமையான குறிப்புகளுக்கு நன்றி.படம் எடுத்துள்ளேன்.அட்மினுக்கு அனுப்பிவைக்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அன்பு ஸ்னேகிதி,
பாராட்டுக்கு நன்றி. என் மகனுக்கும் மிகவும் பிடித்த குறிப்பு இது. படத்தையும் ரசிப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நான் இது போல செய்து சாஸ் போடாம மாசாலாதூள் சேர்ப்பேன்.ஆனாது இது கொஞ்சம் வித்தியாசமா இருந்தது.நல்லா இருந்தது அக்கா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு ரேணு,
பாராட்டுக்கு நன்றி.
மசாலா தூள் போடும்போது திகட்டுவது போலிருக்கும். இந்த முறையில் செய்தால் கொஞ்சம் நிறைய சாப்பிடலாம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

திருமதி. ஸாதிகா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த வெஜிடபிள் நூடுல்ஸின் படம்

<img src="files/pictures/veg_noodles.jpg" alt="picture" />

தூக்கம் துறந்து பி சி முன் இன்னேரம் அமர்ந்து படங்களை இணைத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா,
உங்க சமையல் முன்னால இதெல்லாம் தூசு.
என்றைக்கு அட்மின் தூங்கற நேரத்தில் தூங்கி இருக்கிறார்?
நன்றி ஸாதிகா & பாபு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

திருமதி. ரேணுகா அவர்கள் தயாரித்த நூடுல்ஸ்ன் படம்

<img src="files/pictures/v_noodles.jpg" alt="picture" />

அன்பு ரேணு,
நூடுல்ஸ் கலர்ஃபுல்லா, பார்க்க அழகா இருக்கு. நன்றிப்பா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.