சிறுகிழங்கு பொரியல்

தேதி: January 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறுக்கிழங்கு - கால் கிலோ
வரமிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 25
தேங்காய் பல், பல்லாக நறுக்கிய துண்டுகள் - அரை கப்
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய்


 

சிறுகிழங்கை ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி அதற்குள் ஒரு அரைமணி நேரம் போட்டுவிடுங்கள்.
ஒட்டி இருக்கும் மண் எல்லாம் கரைந்து விடும் பிறகு நன்றாக கழுவிவிட்டு தோலை சீவி எடுத்துவிட்டு, நீளவாக்கில் (ஆரஞ்சு சுளை போல ) நறுக்குங்கள்.
மஞ்சள்தூள், உப்பு போட்டு கிழங்கை வேகவிடுங்கள்.
வரமிளகாய், சீரகம் இரண்டையும் முதலில் அரைத்துக்கொண்டு, சின்னவெங்காயம், தேங்காய் பல் இரண்டையும் ஒன்றிரண்டாக தட்டி எடுங்கள்.
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து கிழங்கையும் அரைத்த மசாலாவையும் போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.


இது ஒரு கேரள வகை பொரியல். இந்த கிழங்கு மார்கழி, தை மாதத்தில் மட்டும்தான் கிடைக்கும். செய்வது சற்று சிரமமாக இருந்தாலும் ருசி சூப்பராக இருக்கும். மறைந்த தமிழக முதல்வர் எம். ஜி ஆர் அவர்களுக்கு இந்த கிழங்கு என்றால் மிகவும் விருப்பமாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சிறு கிழங்கு என்றால் அது எப்படி இருக்கும்?

சிறுகிழங்கு என்பது சின்னதாக உருண்டையாக பிடிகருணை போல் இருக்கும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை