சிறு கிழங்கு வறுவல்

தேதி: January 23, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சிறு கிழங்கு - 1/4 கிலோ
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி அல்லது சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
பொடி உப்பு - தேவையான அளவு


 

சிறு கிழங்கை இரவே தண்ணீரில் ஊறப் போடவும்.
காலையில் கிழங்குகளை அலம்பி கத்தியால் சுரண்டி தோலை உரிக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும் கிழங்குகளைப் போட்டு உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்துக் கிளறி அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும்.
அவ்வப்பொழுது கிளறி விடவும்.
மூடிய தட்டில் இருந்து சொட்டும் நீரிலேயே கிழங்கு வெந்து விடும்.
மீதி தேங்காய் எண்ணெயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.


மேலும் சில குறிப்புகள்