காளான் கறி

தேதி: January 23, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காளான் - 1 டின்
பல்லாரி - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
கருவா - 2 துண்டுகள்
ஏலம் - 1
கிராம்பு - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தயிர் - 1 மேசைக் கரண்டி
ரம்பை இலை - சிறிதளவு
பிஞ்சு கத்திரிக்காய் - 2
மசாலா தூள் - 1 மேசைக்கரண்டி
மிளகு தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

காளானில் உள்ள நீரை வடித்து விட்டு நறுக்கி கொள்ளவும்.
பல்லாரி, தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
கத்திரிக்காயை நீளவாக்கில் இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி கருவா, கிராம்பு, ஏலம், சிறிது வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தயிர், ரம்பை இலை சேர்த்து தாளிக்கவும்.
மீதி உள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காளான் அனைத்தையும் தாளிப்பில் போட்டு வதக்கவும்.
பின் அதில் மசாலாத் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு போட்டு கிளறவும் .
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4 நிமிடங்கள் வேக விடவும்.
வெந்ததும் அரிந்து வைத்த கத்திரிக்காயை போட்டு மிதமான தீயில் 2 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்