வெண்டைக்காய் பொடிமாஸ்

தேதி: January 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 4
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
தேங்காய் - 2 சில்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

தேங்காய், சோம்பு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றை அரைத்து கொள்ளவும். வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, ஒரு கடாயில் வதக்கவும்.
வெண்டைக்காய் நன்கு வதங்கியவுடன் வேறு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி வெண்டைக்காயையும் வதக்கவும்.
பின் அரைத்தவற்றையும், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு மசாலா வதங்கியவுடன் சுருள கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வெண்டைக்காய் பொடிமாஸ் மிகவும் சுவையாக இருந்தது.குறிப்புக்கு நன்றி சரஸ்வதி அக்கா

சுரேஜினி