வெண்டைக்காய் புளிக்குழம்பு

தேதி: January 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

வெண்டைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
புளி - சின்ன எலுமிச்சை அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய் - 2 சில்
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி


 

வெண்டைக்காயை 2 அங்குலம் நீளத்திற்கு நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஒரு தேக்கரண்டி விட்டு வெண்டைக்காயை பிசுப்பிசுப்பு போகும் வரை வதக்கவும்.
மீதி எண்ணெய்யை வேறு கடாயில் விட்டு தாளிக்கவுள்ளவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி புளியை கரைத்து ஊற்றவும்.
நன்கு கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கியவுடன் வெண்டைக்காயை போட்டு மூடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்தேன் சுவைய் நன்றாக இருந்தது நன்றி

ஹாய் சரஸ்வதி மேடம்,
வண்க்கம். உங்களின் இந்த குறிப்பு செய்து பார்த்தேன். நன்றா வந்தது. சுவையும் அருமை.
நன்றி

இப்படிக்கு
இந்திரா

indira

சரஸ்வதி அக்கா உங்களுடைய குறிப்பில் வெண்டிக்காய் புளிக்குழம்பு மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"