மசாலா மொச்சை | arusuvai


மசாலா மொச்சை

food image
வழங்கியவர் : saraswathi
தேதி : Sat, 26/01/2008 - 18:30
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

 • மொச்சை - 200 கிராம்
 • சின்ன வெங்காயம் - 10
 • இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
 • மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
 • கடலைமாவு - 3 தேக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு
 • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
 • கடுகு - ஒரு தேக்கரண்டி
 • சோம்பு - அரை தேக்கரண்டி

 

 • காய்ந்த மொச்சையாக இருந்தால் முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மொச்சை உப்பு சேர்த்து வேகவிடவும்.
 • வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு, மிளகாய்ப்பொடி, மஞ்சள் தூள், கடலை மாவு போட்டு ஒரு துளி எண்ணெய் விட்டு பிசறி வைக்கவும்.
 • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
 • வதங்கியதும் மசாலாவுடன் மொச்சையை போட்டு கிளறி, சிறிது மூடி வேக விடவும். பின் கிளறி இறக்கவும்.இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..