www.arusuvai.com
மசாலா மொச்சை
தேவையானப் பொருட்கள்
- மொச்சை 200கி
- சின்ன வெங்காயம் =10
- இஞ்சி, பூண்டு விழுது =1மேஜைக்கரண்டி
- மிளகாய்பொடி =1தேக்கரண்டி
- ம.பொடி =1/2ஸ்பூன்
- கடலைமாவு =3தேக்கரண்டி
- உப்பு =தேவையானது
- எண்ணை =2மேஜைக்கரண்டி
- கடுகு =1ஸ்பூன்
- சோம்பு =1/2ஸ்பூன்
செய்முறை
- காய்ந்த மொச்சையாக இருந்தால் முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.
- மொச்சை உப்பு சேர்த்து வேகவிடவும்.
- வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு, மிளகாய்பொடி, ம.பொடி, கடலை மாவு போட்டு, ஒரு துளி எண்ணை விட்டு பிசறி வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணை விட்டு கடுகு, சோம்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வசைனை போகும் வரை வதக்கவும்.
- வதங்கியதும் மசாலவுடன் ஆன மொச்சையை போட்டு கிளறி, சிறிது மூடி வேகவிடவும். பின் கிளறி இறக்கவும்.
-