பலாக்கொட்டை பிரட்டல்

தேதி: January 26, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பலாக்கொட்டை - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
மல்லிப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்
பூண்டு - 3 பல்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
அன்னாசிப்பூ - ஒன்று
உப்பு - தேவையான அளவு


 

பலாக்கொட்டையை மேலே உள்ள தோலை உரித்து விட்டு, நீளவாக்கில் நறுக்கி, குக்கரில் வேக வைக்கவும்.
வெந்தவுடன் அடுத்த மேல் தோலையும் எடுக்கவும். தேங்காயை பூண்டுடன் சேர்த்து அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஆகியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், சோம்பு சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி பலாக்கொட்டையை தண்ணீரை வடித்து விட்டு போட்டு கிளறவும்.
கடைசியாக அரைத்த தேங்காய் விழுதை போட்டு சுருள கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்