www.arusuvai.com
பலாக்கொட்டை பிரட்டல்
தேவையானப் பொருட்கள்
- பலாக்கொட்டை =200கி
- வெங்காயம் =1
- தக்காளி =1
- ப.மிளகாய் =2
- மிளகாய்பொடி =1தேக்கரண்டி
- மல்லிபொடி =1தேக்கரண்டி
- ம.பொடி =1/2ஸ்பூன்
- சோம்பு,சீரகத்தூள் =1ஸ்பூன்
- தேங்காய் =2சில்
- பூண்டு =3பல்
- எண்ணை =2தேக்கரண்டி
- கடுகு 1ஸ்பூன்
- பட்டை 1, கிராம்பு 1, அன்னாசிப்பூ 1
- உப்பு =தேவையானது
செய்முறை
- பலாக்கொட்டையை மேலே உள்ள தோலை உறித்து விட்டு, நீளவாக்கில் நறுக்கி, குக்கரில் வேக வைக்கவும். வெந்தவுடன் அடுத்த மேல் தோலையும் எடுக்கவும்.
- தேங்காயை பூண்டுடன் சேர்த்து அரைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணை விட்டு கடுகு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஆகியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இரண்டாக நறுக்கிய ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
- வதங்கியதும் மிளகாய்பொடி, மல்லிபொடி, ம.பொடி, சோம்பு சீரகத்தூள் உப்பு சேர்த்து கிளறி பலாக்கொட்டையை தண்ணீரை வடித்து விட்டு போட்டு கிளறவும். கடைசியாக அரைத்த தேங்காய் விழுதை போட்டு சுருள கிளறி இறக்கவும்.
-