www.arusuvai.com
கொத்தவரங்காய் பொரியல்
தேவையானப் பொருட்கள்
- கொத்தவரங்காய் =25ஒகி
- வெங்காயம் =1
- மிளகாய்பொடி =1ஸ்பூன்
- உப்பு =தேவையானது
- தேங்காய்ப்பூ =1/2 மூடி
- எண்ணை =1தேக்கரண்டி
- கடுகு, உளுந்து =1ஸ்பூன்
செய்முறை
- கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி, கடாயில் 1சொட்டு எண்ணை விட்டு காயை வதக்கவும். வதங்கியதும் 1கிளாஸ் தண்ணீர் விட்டு உப்பு போட்டு வேக வைக்கவும்.
- கடாயில் எண்ணை விட்டு கடுகு, உளுந்து தாளித்து, பொடியாக வெங்காயம் வதக்கி, வெந்த காயின் தண்ணீரை வடித்து விட்டு காயை கொட்டி கிளறி, மிளகாய்பொடி போட்டு சிறுதீயில் கிளறி தேங்காய்ப்பூ போட்டு இறக்கவும்.
-