www.arusuvai.com
கொத்தவரங்காய் வத்தல்
தேவையானப் பொருட்கள்
- கொத்தவரங்காய் =1கி
- உப்பு =1ஆழாக்கு
- தயிர் =1லி
செய்முறை
- கொத்தவரங்காயை இரண்டாக நறுக்கவும். சின்ன காயாக இரந்தால் இரண்டு பக்கமும் காம்பை கிள்ளி விட்டு முழுதாக போட்டு உப்பில் பாதியை போட்டு வேக விட்டு தண்ணீரை வடிக்கவும். [ குழையவிடக்கூடாது.]
- தயிரில் மீதி உப்பை போட்டு காயை ஒரு நாள் ஊறப்போட்டு மறுநாள் தயிரில்லாமல் அள்ளி காயப்போடவும். வெயில் போனவுடன் எடுத்து மறுபடியும் மீதமிருக்கும் தயிரில் போட்டு மறுநாள் காயப்போடவும்.
-
- இதேபோல் தயிர் தீரும்வரை போட்டு எடுத்து காயப்போடவும். நல்ல மொறு மொறுவென்று வரும் வரை காயப்போட்டு மூடி டப்பாவில் போட்டு வைத்தால் தேவையான நேரத்தில் வறுத்து கொள்ளலாம். வத்தக்குழம்பு வைக்காலாம்.
-