முட்டை வறுவல்.

தேதி: January 28, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

முட்டை - 5,
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
தேங்காய் - 1 சின்ன கீற்று,
இஞ்சி - 1 அங்குல துண்டு,
பூண்டு - 6 பல்,
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
கசகசா - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 4 மேசைகரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

பூண்டு, இஞ்சி, தக்காளி, சோம்பு, கசகசா, இஞ்சி, 3 பல் பூண்டு, 3 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து வைக்கவும்.
முட்டையை வேக வைத்து, தோலுரித்து, அங்கங்கே கீறி வைக்கவும்.
மீதி வெங்காயத்தையும், பூண்டையும் நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
வதக்கியபின், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்தபின், கீறிய முட்டைகளை சேர்த்து கிளறவும். நன்கு மசாலா சுருண்டு வரும்போது இறக்கவும்.


தேவைப்பட்டால் நறுக்கிய கொத்தமல்லி தூவலாம். சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி அக்கா இந்த வறுவல் மிகவும் நன்றாக இருந்தது. நீங்கள் சொன்னது போலவே சாதத்துடன் சைட் டிஷ்ஷாக சாப்பிட மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

அன்பு வானு,
நலமா? பாராட்டுக்கு நன்றி. கொஞ்சம் மசாலா இருப்பதால் கலந்த சாதத்திற்கெல்லாம் நன்றாக இருக்கும். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வியக்கா,
இந்த முட்டை வறுவலை இன்று செய்தேன். நீங்கள் குறிப்பிட்டுளதுபோல் கலந்த சாதத்திற்கு (வண்ணமிகு எலுமிச்சை சாதம்) தொட்டுக்கொள்ள - ரொம்ப மேட்சா ரொம்ப நல்லா இருந்தது - இன்னைக்கு லன்ச் இந்த காம்பினேஷ்ந்தான்! சும்மா முட்டை வறுவலின் சுவை அற்புதம்!
முத்தான இந்த முட்டை குறிப்புக்கு மிக்க நன்றி அக்கா!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு ஸ்ரீ,
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

I tried your recipe, it was very good with lemon rice.

அன்பு சுஜாதா,
பாராட்டுக்கு நன்றி. சமையலோடு அறுசுவையில கொஞ்சம் தமிழும் கத்துக்கோங்க. நம்ம அறுசுவைல எல்லாவற்றையும் கத்துக்கலாம், ரொம்ப சுலபமா. அப்பத்தான் நிறைய பேர்கிட்ட பேச முடியும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.