ஆட்டுக்கால் குழம்பு

தேதி: January 28, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆட்டுக்கால் - 2,
காய்ந்த மிளகாய் - 6,
மிளகு - 1/2 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
தனியா - 2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி,
புளி - ஒரு நெல்லிக்காயளவு,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 5,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

ஆட்டுக்காலை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். (சூப் எடுத்த பின் உள்ள எலும்புகளையும் எடுத்துக் கொள்ளலாம்).
மிளகு, சீரகம், தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்து, மிக்சியில் இட்டு நைசாக அரைக்கவும்.
புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
குக்கரில் ஆட்டுக்காலுடன் உப்பு, 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 10 விசில் வரும் வரை விட்டு இறக்கவும். (சூப் எடுத்த எலும்பாக இருந்தால் வேக வைக்க தேவையில்லை).
எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுது, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் வேக வைத்த ஆட்டுக்காலை சேர்த்து 5 நிமிடம் விட்டு இறக்கவும். தேவைப்பட்டால் மட்டுமே உப்பு சேர்க்கவும்.


ஆட்டுக்காலை தணலில் பொசுக்கி, தோலை சுத்தமாக நீக்கி விட வேண்டும். அப்படி சுத்தம் செய்த காலை 1 மாதம் போல் வைத்திருந்தாலும் கெடாது. குழம்பு செய்யும் முன் ஆட்டுக்காலை நன்கு தேய்த்து கழுவி விட வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்