சேலம் மீன் குழம்பு

image

வழங்கியவர் : senthamizh selvi

தேதி : திங்கள், 28/01/2008 - 00:12

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்.

பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு.

4.076925
13 votes
Your rating: None
 

 

  • (குழம்பு) மீன் - 1/2 கிலோ,
  • சின்ன வெங்காயம் - 10,
  • பூண்டு - 8 பல்,
  • தக்காளி - 1,
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
  • புளி - ஒரு பெரிய எழுமிச்சம் பழ அளவு,
  • வெந்தயம் - 1 தேக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு,
  • நல்லெண்ணெய் - 1 குழம்பு கரண்டி,
  • வதக்கி அரைக்க:-
  • ------------------------
  • சீரகம் - 1 தேக்கரண்டி,
  • மிளகு - 1 தேக்கரண்டி,
  • சின்ன வெங்காயம் - 15,
  • பூண்டு - 10 பல்,
  • தக்காளி - 2,
  • தேங்காய் துருவல் - 1/4 மூடி,
  • மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
  • தனியா தூள் - 1 மேசைக்கரண்டி,
  • தாளிக்க:
  • ------------
  • கறிவேப்பிலை - சிறிது,
  • கடுகு - 1/2 தேக்கரண்டி,
  • சீரகம் - 1/4 தேக்கரண்டி,
  • வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
  • எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.

 

  • மீனை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து, கழுவி வைக்கவும்.
  • வெங்காயம், பூண்டை இரண்டாக நறுக்கி வைக்கவும்.
  • தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • புளியை 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும்.
  • வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் வதக்கி, அத்துடன் தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • அரைத்த விழுதை புளிகரைசலுடன் சேர்த்து கரைத்து வைக்கவும்.
  • வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து இரண்டாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  • குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும்.
  • மீன் வெந்ததும், வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, நைசாக பொடித்து, குழம்பில் போட்டு இறக்கவும்.
  • நல்லெண்ணையை குழம்புக் கரண்டியில் ஊற்றி, அடுப்பில் சூடு பண்ணவும்.
  • நன்கு சூடேறியதும் கரண்டியோடு சேர்த்து குழம்புக்குள் விட்டு கலக்கி மூடவும்
  • மணமணக்கும் கலர்ஃபுல்லான மீன் குழம்பு தயார்.

Note:

நல்லெண்ணய் சுட வைக்க தாளிக்கும் கரண்டி இரும்பில் வைத்திருப்பார்கள், அதிலும் சூடு பண்ணி ஊற்றலாம். குழம்புக்குள் விடும் போது கவனமாக தள்ளி நின்று செய்யவும், இல்லையெனில் மேலெங்கும் தெறித்து விடும்.







Portia Manohar
Selvi amma,
just now i finished the salem meen kulambu,en veetukararuku meen romba pidikum,aiyya innaikuthan meeting mudichittu 4 naal kalzhithu jakarta thirumburar,so spl mann vasani manakka salem meen kulambu ready, parratu nithchayam. super taste la vanthiruku. ella parattum ungalukuthan. nallaiku enn veetukarar en kai manathai eppadi parratunarunu sollurean.ok va.
bye

Portia Manohar

இன்று நான் உங்களுடைய மீன் குழம்பு செய்தேன். சூப்பர் taste .உங்க வீட்லேயே வந்து செட்டில்லயிடலாமானு தோனுது.thanks.

anbutan

anu

ஹாய் அனு,
எங்க ஊர் மீன் (குழம்பு) இப்படி உலகமெல்லாம் மணக்குதா?
அதுக்கென்ன, வீட்டுக்கு வந்து தாராளமா செட்டிலாயிடலாம். நான் வேணா சீஃப் குக் ஆயிடறேன், சீஃப் குக்கோட வேல என்னனு தெரியுமில்ல, மெனு சொல்றதும், அளவு சொல்றதும், சமைக்கற முறை சொல்றதும் தான். மத்ததெல்லாம் அஸிஸ்டென்டோட வேலை. உன்ன வேணா என்னோட அஸிஸ்டென்டா வெச்சுக்கறேன் (பெரிய மனசு பண்ணி). ஓக்கேவா :-) பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செல்வி மேடம்
நேற்று மருந்து சோறு, உங்கள் சேலம் மீன் குழம்பு, இறால் தந்தூரி,பிளெயின் தால், அப்பளம்.
நல்ல இருந்தது டிபெரெண்டானா டேஸ்ட்.கொஞ்சம் கட்டியாகி விட்டது.
நைட் தோசைக்கு சாப்பிட்டோம்.
ஜலீலா

Jaleela

உஙகள் குறிப்புகளின் எண்ணிக்கை பார்த்து அசந்துவிட்டேன்.வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.,

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஜலீலா,
நலமா? உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. கொஞ்சம் முன்னாடியே இறக்கிடுங்க. ஆனா, ரொம்ப தண்ணியா இருக்காது இந்த குழம்பு. எங்க பக்கத்தில கொஞ்சம் திக்கா வேணும்னுதான் நினைப்பாங்க.
தோசைக்கு ரொம்ப நல்லாயிருக்கும். அதுவும் மறுநாள் ரொம்ப நல்லாயிருக்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு ஆசியா,
நலமா? உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி. வேறு சந்தர்ப்பத்தில் மீண்டும் பேசுவோம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம்,
உங்க பதில் பர்ர்த்து மகிழ்ச்சி.டைம் கிடைக்கும் பொழுது கூட்டான்சோறுவில் உஙக recipes பர்ர்ப்பேன்.பொழுது போவது தெரியாது..
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

செல்வி மேடம் நேற்று மறுபடியும் சேலம் மீன் குழம்பு செய்து பார்த்தேன்,
ரொம்ப நல்ல இருந்துச்சு.
ஜலீலா

Jaleela

அன்பு ஜலீலா,
நலமா? ரொம்ப நன்றி பாராட்டிற்கு.
திரும்ப செய்து பார்க்கும் அளவு இருந்ததமைக்கு சந்தோஷம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

Thanks for sharing this tasty fish kolzambu receipe. Your instructions were very clear and detailed. I just modified the receipe by adding whole corriander seeds and whole red chilly instead of powders while frying the spices. It came out good and tasted great! I used Tilapia fish which is a fresh water fish.
Thanks again!

அன்பு சகோதரர் நாகு,
மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு. நீண்ட நாள் உறுப்பினராக இருந்தும் தங்கள் பதிவுகளை சமீபமாகத்தான் பார்க்கிறேன்.
உண்மை. நீங்கள் சொல்லியது போல் எங்கள் பாட்டி மிளகாயையும், தனியாவையும் வறுத்துத் தான் அரைத்து வைப்பார்கள். ஆனால் இப்ப நிறைய பேருக்கு முழுசாக வறுத்து அரைக்க கஷ்டமா இருப்பதால், பொடிதானே பயன்படுத்தறாங்க. எங்க பாட்டி தாளிக்கும் இரும்பு கரண்டியில் தனித்தனியாக வறுத்து, கலர்கலராக அரைத்து (மஞ்சள் உள்பட) வைத்திருக்கும் அழகே தனி.
ஒரு செஃபாக இருந்தும் என் குறிப்பை நீங்கள் பாராட்டியது மிக்க மகிழ்ச்சி.நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

yesterday in my friends place i had potato mixer.they said they bought it from indian store,its very tasty.anybody knows the recipe plez let me know.

செல்வியக்கா நேற்று இந்த மீன் குழம்பும்,சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியலும்,சாதமும் ஆஹா ஓஹோ என்று இருந்தது.இன்னும் இதை மண்கலத்தில் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கிறேன்..சூப்பர்
நான் அனுப்பிய மெயில் கிடைத்ததா?இல்லையென்று நினைக்கிறேன்.

தளிகா

அன்பு ரூபி,
நலமா? ரீமா எப்படி இருக்கா? மெயிலுக்கு பதில் அடிச்சு சிஸ்டம் ப்ராப்ளம்னால அனுப்ப முடியல. திரும்ப அடிக்க டைம் இல்லை.
மீன் குழம்பு மண்சட்டியில் தானே. ஊருக்கு வரும் போது வைத்து பார். அப்பறம் திரும்ப போகும் போது உன் சூட்கேஸில் சட்டி இருக்கும். பாராட்டுக்கு நன்றி ரூபி.
மெயில் அனுப்பறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ரொம்ப அருமையா வந்தது. என் கணவர் மிகவும் ரசித்து சாப்பிட்டார்.... இது தான் என்னோட முதல் நல்ல மீன் குழம்பு....

நன்றி.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்பு இலா,
நலமா? இந்த பாராட்டிற்கு உரியவர் என் பாட்டி தான். அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்ட நல்ல குறிப்புகளில் இதுவும் ஒன்று. உங்கள் கணவருக்கும் பிடித்தது குறித்து மிக்க சந்தோஷம். பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

You know onething.. my mom never cooked chicken or Fish in her lifetime .. Trust me.. that is very true.

I learnt this kulambu from you... For the first time ever.. I felt good abt cooking Fish and very confident too.

You are amazing.. Btw.. Congrats on your new home.

Take care of your health.

ila

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

திருமதி. ஜலிலா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த மீன் குழம்பின் படம் Salem fish kulambu

அன்பு ஜலீலா,
மீன் குழம்பை செய்து பார்த்ததோடு அல்லாமல், அதை படமும் எடுத்து அனுப்பியதற்கு மிக்க நன்றி.
படம் சூப்பரா இருக்கு. குழம்பு சூப்பரான்னு நீங்க தான் சொல்லணும்.
படத்தை இணைத்த அட்மினுக்கும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

hello selvi maa,
i tried ur மீன் குழம்பு. it came out very well.my husband liked it very much.from office he called me& told it is SUPER thank u for ur recipie.

finally i added little fish fried oil to tht மீன் குழம்பு, after switching off the flame, it gives an added taste 2 tht curry.this tip is given by my mum.

அன்புடன்
விஜி

அன்பு விஜி,
என்னுடைய குறிப்பை செய்து பார்த்தமைக்கும், பாராட்டுக்கும் நன்றி. மேலும் உங்கள் கணவரிடமிருந்தும் பாராட்டு பெற்றிருக்கிறீர்கள் (இதுதான் சாக்கென்று பரிசும் கேட்கவேண்டியது தானே!). மிக்க மகிழ்ச்சி.
நீங்கள் சொல்லிய எண்ணெய் எதுவென்று எனக்கு புரியவில்லை. ஆனால், நானும் கடைசியில் நல்லெண்ணெய் காய்ச்சி ஊற்ற சொல்லி இருக்கேனே. அதுதான் மிக்க ருசியும், மணமும் கொடுக்கும். உங்கள் அம்மாவுக்கு் அது தெரிந்து உள்ளது. நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இல்ல செல்விமா,
நல்லெண்ணெய் வீட்டில் stock இல்லை.அப்போ தான் அம்மா சொன்னது நியாபகம் வந்தது.நாம மீன் fry பன்றோம் இல்லயா, அந்த மீதம் இருக்கும் எண்ணெய் ஊற்றினால்,it gives an added taste.

செல்விமா உங்களுக்கு cashew gravy recipie தெரியுமா?தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்
அன்புடன் ,
விஜி

அன்பு விஜி,
ஓ, அப்படியா? நல்லது தான். பொரித்த எண்ணெயும் வாசம் இருக்குமில்ல! எனக்கும் இந்த குறிப்பு சமயத்துக்கு உதவும்.

என்ன மாதிரி கிரேவி வேணும்? வெஜ்ஜிலா, நான் வெஜ்ஜிலான்னு சொன்னா நான் ஏற்கனவே இருக்கான்னு சொல்றேன். இல்லைன்னா தர்றேன். நான் எதையும் இப்படித்தான் இந்த பொருட்களை வைத்துத்தான் செய்யணும்னு செய்ய மாட்டேன். எது இருக்கிறதோ, அதை மாற்றாக வைத்து செய்து பார்ப்பேன். நான் எந்த பொருளையும் இது சமைக்கணும்னு வாங்க மாட்டேன். வாங்கிய பின்பு அதில் சௌகரியத்துக்கு தகுந்தாற் போல் சமைப்பேன். மளிகை சாமான்களும் முடிந்த வரை வருடத்திற்கும், மாதாந்திரமாகவும் வாங்குவேன். இடையில் தீர்ந்தால் அதுக்கு மாற்று பொருளை வைத்து சமாளித்து விடுவேன்.
அதனால் என்ன மாதிரின்னு சொன்னா, அதுக்கு தகுந்தாற் போல் குறிப்பு சொல்றேன். குழப்பிட்டேன்னு நினைக்கிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஓட்டலில் நாண் கூட கொடுப்பாங்களே,அது போல செல்விமா,அப்படியே cashew முழுசா போட்டு?either veg or nonveg?

செல்வி அக்கா இன்று இந்த மீன் குழம்பு செய்தேன்,ரொம்ப ரொம்ப ...ரொம்ப அருமைய்ய்ய்யா இருந்தது இன்று டயட்டை மறந்து ஒரு பிடி பிடிக்கவேண்டியது தான்!எல்லோரும் இந்த குழம்பை முயற்ச்சி செய்யுங்க!உண்மைய்யில் நல்லா இருக்கு!நல்ல குறிப்பை தந்த உங்களுக்கு எனது நன்றிகள் அக்கா!

ஹாய் விஜிராம்ஸ்,
குறிப்பு எழுதி வெச்சிருக்கேன். சீக்கிரமே அந்த குறிப்ப கொடுத்திடுவேன். கொஞ்சம் பொறுத்துக்கோ.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு ரஸியா,
பாராட்டுக்கு மிக மிக மிக நன்றி. என்ன இருந்தாலும் பாரம்பரிய சமையலுக்கு ஈடு இணை கிடையாது. அம்மியில் அரைத்து வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். நான் சாப்பிடா விட்டாலும் அந்த மணத்தை ரசிப்பேன். டயட்டாவது ஒண்ணாவது, ஒரு நாளைக்கு எல்லாத்தையும் ஓரங்கட்டிட்டு ஒரு பிடி பிடி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விமா நானும் உங்களை மாதிரி சின்னவயசுல இருந்தே மீன் சாப்பிடமாட்டேன்,இப்போ தான் ஹஸ் திட்டிதிட்டி ஐஸ் மீன் சாப்பிடுறேன்.கிளங்கா மீனில் செய்தேன் சுவையோ சுவை அம்புட்டு ருசி!!.நான் வைக்கும் மீன் குழம்பில் தேங்காய் சேர்க்க மாட்டேன்.
செல்விமா நானும்,ஷிவானியும் நலம்,உங்க உடல்நலம் எப்படி இருக்கு,உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன்,வந்ததா?.பின்னுட்டத்தில் விசார்க்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க,மற்ற பதிவுல போட்டா நீங்க பார்ப்பிங்களான்னு தெரியல,அதனால தான் இங்கு விசார்க்கிறேன்மா.

அன்பு மேனு,
இந்த பக்கம் இருந்துட்டு நீ மீன் சாப்பிடலைன்னா ஆச்சரியம் தான். என்னால் தான் என்ன சொன்னாலும் சாப்பிட முடியலை. எங்க பக்கம் தேங்காய் இல்லாமல் மீன் குழம்பு வைக்க மாட்டாங்க. பாராட்டுக்கு நன்றி.
மெயில் பார்த்தேன். விளக்கம் மெயிலில் அனுப்புகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.