வெஜிடபிள் பேபி சூப்

தேதி: January 28, 2008

பரிமாறும் அளவு: 2 குழந்தைகளுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 1/2
கேரட் - 1/2
பீன்ஸ் - 6
பீட்ரூட் - 1/2
பீஸ் - கால் கப்
வெங்காயம் - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - அரை தேக்கரண்டி
பிரியாணி இலை - ஒன்று
உப்பு - கால் தேக்கரண்டி
குருமிளகுத் தூள் - அரை தேக்கரண்டி


 

எல்லா காய்கறிகளையும் பொடியாக நறுக்கி அதனுடன் சீரகம், உப்பு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 விசில் விடவும். ஆவி அடங்கியதும் திறக்கவும். பிறகு வெண்ணெயை சூடாக்கி அதில் பிரியாணி இலை போட்டு வெந்த சூப்பை கொட்டி குருமிளகுத் தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். உருளைக்கிழங்கு இருப்பதால் நல்ல கூழ் போல் ஆகிவிடும். ஸ்பூனால் எடுத்து ஊட்டலாம்.


இன்னும் கொஞ்சம் ருசிக்காக குருமிளகு சேர்க்கவும். சிறு குழந்தை என்றால் தவிர்க்கலாம். 6 மாத குழந்தை முதல் கொடுக்கலாம். எல்லா காய்கறியில் வெந்து விடுவதால் நமக்கும் திருப்தி. இதை குழந்தை குடிக்க மறுத்தால் சாதத்தில் பிசைந்து ஊட்டுங்கள். இல்லையென்றால் உருளைக்கிழங்கு சேர்க்காமல் செய்து வடித்து தண்ணீர் மட்டும் கொடுங்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

akka peace'nna enna

God is love

சரண்யா,
பீஸ் என்றால் பச்சை பட்டாணி..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

thank you imma and abi madam

God is love

அபி சொன்னது சரி. பயன்படுத்தியிருக்கிறது பட்டாணி தான்.

ஆனால் //peace'nna enna// சமாதானம் / அமைதி.
இது peas - பட்டாணி.

‍- இமா க்றிஸ்

உங்களுடைய வெஜிடபுள் பேபி சூப் இன்று மகளுக்கு செய்து குடுத்தனான்.மிகவும் நன்றாக இருந்தது நன்றி .

நன்றி காயத்ரி

என் குறிப்பிலுள்ள குழந்தைகள் உணவுகள் அவ்வளவு டேஸ்டாக இருக்காது கொஞ்சம் உப்பு சப்பில்லாமல் தான் இருக்கும் ஆனால் குழந்தைகள் சாப்பிடும் ஆரோகியமானதும் கூட..நன்றி காய்த்ரி