கோவக்காய், பாகற்காய் கூட்டு (சர்க்கரை வியாதிக்கு)

தேதி: January 28, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

கோவக்காய் - பத்து
பாகற்காய் - பாதி
கடலை பருப்பு - மூன்று தேக்கரண்டி
பாசி பருப்பு - நான்கு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
அரைத்து கொள்ள:
காய்ந்த மிளகாய் - நான்கு
சீரகம் - அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் - மூன்று தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரன்டி
கறிவேப்பிலை - சிறிது
தாளிக்க:
எண்ணெய் - இரண்டு தேக்கரன்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

பருப்பு வகைகள் இரண்டையும் ஐந்து நிமிடம் ஊற வைத்து வேக வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைக்கவும்.
காய்களை ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும் வெந்ததும் வெந்த பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
அரைத்ததை சேர்த்து மீண்டும் நல்ல கொதிக்க விடவும்.
கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.


கோவக்காயும் பாகற்காயும் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Hi Jaleela, I made this receipe today. I didn't have bitter gourd so made this with only the Ivy gourd. It tasted good.

என்னை மாதிரி டயாபட்டிக்-காரர்களுக்கு ஏற்ற மெனு. டேஸ்டும் நன்றாக இருந்தது. நல்ல ஷார்ட் மெத்தடில் குறிப்புகளை எழுதுகிறீர்கள் ஜலீலா......

மாலதி யக்கா என்ன சொல்றீங்க புரியல. இப்பதான் கொடுத்தேன் அதற்குள் செய்து விட்டீர்களா?யோசித்து கொண்டே இருந்தே ஏதாவது டிபெரெண்டா கொடுக்கனும் என்று அதான் கொடுத்தேன்.
உங்களுக்கு சுகர் இருக்கா, என்றும் கவலை பட தேவையில்லை வேப்பம் பூவை நெயில் வதக்கி சாததில் போட்டு பிசைந்து சாப்பிடுங்கள்.
பிறகு எல்லம் சாப்பிட்டு கொள்ளுங்கள்.
சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து கொள்ளுங்கள்.இன்னும் ஏதாவௌ ஐடியா கிடைத்தால் சொல் கிறேன். கண் கண்ட மருந்து பகற்காய் ஜூஸ் குடித்து பாருஙகள் குடித்து விட்டு கொஞ்சம் நாக்கில் நார்த்தங்காய் உறுகாய் தடவுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஜலிலா அக்கா,
இன்று மதியம் லன்ச்க்கு இந்த கூட்டு செய்தேன். மாலதி மேடம் சொன்ன மாதிரி செய்வதற்கு எவ்வளவு ஈசி இந்த ரெசிப்பி?! ஒரு அடுப்பில் பருப்பு வேகவிட்டு, இன்னொரு அடுப்பில் காய் வேகவிட்டு, அரைக்க வேண்டியவற்றை அரைத்துக்கொண்டு வந்தால், அடுத்த சில நிமிடங்களில் கூட்டு தயார்! நிஜமாகவே வெரி ஷார்ட் மெத்தெட்! டேஸ்ட்டும் ரொம்ப நன்றாகவே இருந்தது. சூப்பர் குறிப்புக்கு நன்றி அக்கா!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

டியர் ஸ்ரீ கோவைக்காய் கூட்டு செய்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.
ஜலீலா

Jaleelakamal

கோவகார கிளியே என்னை கொத்தி விட்டு போகாதே.இன்று என் வீட்டில் இந்த கோவக்கா கூட்டு நல்லா இருந்த்து.கசக்கும் என்று நினைத்தேன்.ஆனால் கசப்பே இல்லை/.உங்கள் அருளால் நானும் இன்று என் பாவற்காய் விரதத்தை முடித்துவிட்டேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

என்ன ரேணுகா பாட்டெல்லாம் பலமாக இருக்கு.
பாகற்காய் வேலை செய்யுதா? ஆகா என் பகற்காய் சாப்பிடாதவர்களையும் சாப்பிட வைத்து விட்டதா?
மிக்க நன்றி. எல்லாமே அதிராவிற்கு தான். அதிராவிற்கு ஒரு ஓ போடுங்க பா எல்லோரும்.

ஜலீலா

Jaleelakamal

திருமதி. ரேணுகா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த கோவக்காய் கூட்டின் படம்

<br /><img src="files/pictures/kovakkai_koottu.jpg" alt="Kovakkai koottu" />

கோவைக்காய் பகற்காய் கூட்டு ரொம்ப ஜோரா இருக்கும் படம்.
ரேணுகா, அட்மின் இருவருக்கும் நன்ரி.
ஜலீலா

Jaleelakamal