கோவைக்காய் மசூர் தால் சாம்பார் (சர்க்கரை வியாதிக்கு)

தேதி: January 28, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேகவைக்க:
மசூர் தால் - அரை கப்
துவரம் பருப்பு - கால் கப்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - நான்கு
பரங்கிக்காய் - ஒரு சிறிய துண்டு
புளி - ஒரு சிறிய எலுமிச்சை பழம் அளவு
வெல்லம் - ஒரு பிட்டு
கோவைக்காய் - எட்டு
பாகற்காய் - ஆறு ரவுண்டு வில்லைகள்
வறுத்து பொடிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - நான்கு
முழு தனியா - இரண்டு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - இரண்டு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம்- கால் தேக்கரண்டி
வெந்தயம் - மூன்று
கறிவேப்பிலை- ஐந்து கொத்து
பெருங்காயம் - ஒரு பின்ச்
நெய் - ஒரு தேக்கரண்டி


 

முதலில் இரு பருப்புகளையும் களைந்து ஊற வைத்து வேக வைக்க கொடுத்துள்ளவைகளை போட்டு குழைய வேக வைத்து கொள்ளவும்.
வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணெயில் கருக விடாமல் வறுத்து பொடித்து கொள்ளவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து கொள்ளுங்கள்.
கோவைக்காயை வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளவும். வட்ட வடிவமாக நறுக்கிய பாகற்காய் ஆறு. புளி தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
பிறகு கோவக்காய் மற்றும் பாகற்காயை சேர்க்கவும். பாதி வெந்ததும் பொடித்து பொடியை சேர்க்கவும். பிறகு வெல்லம் வேக வைத்த பருப்பை மீண்டும் ஒரு முறை மசித்து சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கடைசியில் நெய், கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். சுவையான மணமான கோவைக்காய் சாம்பார் ரெடி.


கோவைக்காய் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும். ஆகையால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள். சாம்பார் பொடி இல்லையா கவலை வேண்டாம். இந்த பொடியை அவசரத்திற்கு திரித்து செய்யுங்கள் மணம் தூக்கலாக இருக்கும்.
வேறு எந்த காய் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். இது அவசரத்திற்கு சாம்பார் பொடி தீர்ந்து விட்டல் இப்படி செய்யலாம். ஒரு டிப்ரெட்ண்டாக இருக்கும். ஹோட்டல் சாம்பாரின் ரகசியம் மசூர் தாலும், பரங்கிக்காயும்.

மேலும் சில குறிப்புகள்