கோவைக்காய் சர்க்கரை வியாதியை கட்டு படுத்தும் ஆகையால் இதை அடிக்கடி உண்டவில் சேர்த்து கொள்ளுங்கள்.
சாம்பார் பொடி இல்லையா கவலை வேண்டாம் இந்த பொடியை அவசரத்திற்கு திரித்து செய்யுங்கள் மணம் தூக்கலாக இருக்கும்
தேவையானப் பொருட்கள்
- வேகவைக்க
- -----------
- மசூர் தால் - அரை கப்
- துவரம் பருப்பு - கால் கப்
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- சீரகம் - அரை தேகக்ர்ண்டி
- சின்ன வெங்காயம் - நாலு
- பரங்கிக்காய் - ஒரு சிறிய துண்டு
- புளி - ஒரு சிறிய எலுமிச்சை பழம் சைஸ்
- வெல்லம் - ஒரு ப்ட்டு
- கோவைக்காய் - எட்டு
- பாவக்காய் - ஆறு ரவுண்டு வில்லைகள்
- வருத்து பொடிக்க
- ------------------
- எண்ணை - ஒரு தேக்கரண்டி
- காஞ்ச மிளகாய் -நாலு
- முழு தனியா - இரண்டு தேக்கரண்டி
- கடலை பருப்பு - இரண்டு தேக்கராண்டி
- வெந்தயம் - கால் தேக்கர்ண்டி
- மிளகு - கால் தேகக்ர்ண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- கருவேப்பிலை - கொஞ்சம்
- தாளிக்க
- -------
- எண்ணை -முன்று தேகக்ரண்டி
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- சீரகம்- கால் தேக்கரண்டி
- வெந்தயம் - முன்று
- கருவேப்பிலை- ஐந்து ஆர்க்
- பெருங்காயம் - ஒரு பின்ச்
- நெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை
- முதலில் இரு பருப்புகளையும் களைந்து ஊறவைத்து வேக வைக கொடுத்துள்ளவைகளை போட்டு குழைய வேகவைத்து கொள்ளவும்.
- வருத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணையில் கருகாமல் வருத்து பொடித்து கொள்ளுங்கள்.
- புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து கொள்ளுங்கள்.
- கோவைக்காயை வட்ட வடிவமாக அரிந்து கொள்ளுங்கள்.
- வட்ட வடிவமாக அரிந்த பாவக்காய் ஆறு.
- புளி தண்ணீரில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
- பிறகு கோவக்காய் மற்றும் பாவக்காயை சேர்க்கவும் பாதி வெந்ததும் பொடித்து பொடியை சேர்க்கவும்.
- பிறகு வெல்லம் வெந்தபருப்பை மீண்டும் ஒரு முறை மசித்து சேர்த்து நல்ல கொதிக்கவிட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகள தாளித்து கடைசீயில் நெய்,கொத்துமல்லி தழை சேர்த்து இரக்கவும்.
- சுவையான மணாமான கோவைக்காய் சாம்பார் ரெடி.
-
- .
-
குறிப்பு
வேறு எந்த காய் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.
இது அவசரத்திற்கு சாம்பார் பொடி தீர்ந்து விட்டல் இப்படி செய்யலாம்.
ஒரு டிப்ரெட்ண்டாக இருக்கும்.
ஹோட்டர் சாம்பாரின் ரகசியம்மசூர் தாலும், பரங்கிக்காயும்.